சமீபத்தில் இணையதளம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் செய்தி வனிதா மற்றும் பீட்டர் பால் திருமணம், அதன் தொடர்பான பிரச்சனைகளும் ஆகும்.
பீட்டர் பாலின் முதல் மனைவி ஹெலன் தங்களுக்கு இன்னும் விவாகரத்து ஆகவில்லை என்ற செய்தியை வெளியிட்டது முதலே பலரும் வனிதாவை விமர்சித்து பதிவுகளை வெளியிட்டு வந்தார்கள். இதற்கு தக்க பதிலடி கொடுத்து வந்த வனிதா, சமீபத்தில் சூர்யா தேவி என்பவர் மீது சைபர் புல்லியிங் கேஸ் ஒன்றையும் கொடுத்தார்.
இதைத்தொடர்ந்து வனிதாவை மீண்டும் லட்சுமிராமகிருஷ்ணன், கஸ்தூரி, தயாரிப்பாளர் ரவீந்தர் ஆகியோர் விமர்சனம் செய்து வந்தார்கள்.
இந்நிலையில் தற்போது வனிதா பிரச்சனையில் கைதான சூர்யா தேவி, வருகிற பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போவதாக தற்போது செய்தி வெளியாகி காட்டு தீ போல பரவி வருகிறது.
இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கவுள்ளாதாக ஏற்கனவே செய்தி வந்துள்ளது. தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சி செப்டம்பர் மாதம் தொடங்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.