டிஜிட்டல் பிளாட்ஃபார்மில் என்ட்ரியாகப்போகும் ப்ரியா பவானி ஷங்கர்… இயக்குநர் யார் தெரியுமா?
August 20, 2020 / 12:35 PM IST
|Follow Us
‘கொரோனா’ பிரச்சனையால் இப்போது திரையுலகில் அனைத்து படங்களின் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டுள்ளது, திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளது. இதனால், தயாரிப்பாளர்கள் படங்களை நேரடியாக OTT-யில் ரிலீஸ் செய்து வருகிறார்கள். சமீபத்தில், ஜோதிகா நடித்துள்ள ‘பொன்மகள் வந்தாள்’, கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ‘பெண்குயின்’, யோகி பாபு நடித்துள்ள ‘காக்டெய்ல்’, வரலக்ஷ்மி சரத்குமார் நடித்துள்ள ‘டேனி’, வைபவ் நடித்துள்ள ‘லாக்கப்’ ஆகிய தமிழ் படங்கள் OTT-யில் வெளி வந்தது.
தற்போது, முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான யுவன் ஷங்கர் ராஜா OTT-க்காக ஒரு திரைப்படத்தை தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘YSR ஃபிலிம்ஸ்’ மூலம் தயாரிக்கலாம் என திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த படத்தை ‘ஒரு நாள் கூத்து, மான்ஸ்டர்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் தான் இயக்க கமிட்டாகி உள்ளாராம்.
ஹீரோயினை மையமாக வைத்து தான் இப்படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் கதையின் நாயகியாக பிரபல நடிகை ப்ரியா பவானி ஷங்கர் நடிக்க உள்ளாராம். ஏற்கனவே, நெல்சன் இயக்கிய ‘மான்ஸ்டர்’ படத்திலும் ப்ரியா பவானி ஷங்கர் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய படம் ‘ஜீ5’-யில் தான் ரிலீஸாகுமாம்.