நிபந்தனைகளுடன் திரையரங்குகள் திறக்கப்பட வாய்ப்புகள் அதிகம் !!
August 20, 2020 / 06:56 PM IST
|Follow Us
நாடு முழுவதும் கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வரும் நிலையில் திரைப்பட படப்பிடிப்புகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது, மேலும் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. எப்போது படப்பிடிப்புகள் நடத்துவதற்கு அரசு அனுமதி வழங்கும் என்று தயாரிப்பு நிறுவனங்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றன.
பெரிய முன்னணி நட்சத்திரங்களின் படப்பிடிப்புகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. ரஜினி நடிப்பில் “அண்ணாத்த”, அஜித் நடிப்பில் “வலிமை”, சூர்யா நடிப்பில் “வாடிவாசல்”, விக்ரம் நடிப்பில் “கோப்ரா” போன்ற படத்தின் படப்பிடிப்புகள் கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் தமிழகம் உள்ளிட்ட சில இந்திய மாநிலங்களில் நிபந்தனைகளுடன் கூடிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் திரையரங்குகள் போன்ற அதிகமாக மக்கள் கூட்டம் கூடும் இடங்கள் இன்னும் திறக்கப்படவில்லை. இந்நிலையில் விரைவில் திரையரங்குகள் சில நிபந்தனைகளுடன் திறக்கப்படலாம் என்று செய்தி வெளியாகியுள்ளது.
தனியாக இருக்கும் திரையரங்குகள் மட்டுமே திறக்கப்படும் என்றும், அவ்வாறு திறக்கப்பட்டால் இரண்டடுக்கு முகக் கவசங்கள் அணிந்து கொண்டு மக்கள் வரவேண்டும் என்றும், கிருமிநாசினி குறித்த விழிப்புணர்வுடன் மக்கள் இருத்தல் வேண்டும் என்றும் நிபந்தனைகள் இருக்கக்கூடும் என்று செய்தி வந்துள்ளது.
இதனால் மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் திறப்பதற்கான வாய்ப்பில்லை என்றும் தனியான திரையரங்குகள் மட்டும் திறப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது என்றும் கூறப்படுகிறது. மேலும் டிக்கெட் புக்கிங் அனைத்தும் ஆன்லைன் மூலம் மட்டுமே இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப் படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் கிடப்பில் வெளிவராமல் கிடக்கும் பெரிய நட்சத்திரங்களின் படங்கள் அடுத்தடுத்து வெளியாகும் என்று ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.