விஜய்யின் நெருங்கிய நண்பர் வெளியிட்டுள்ள க்யூட் வீடியோ!
August 21, 2020 / 02:54 PM IST
|Follow Us
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் விஜய். இவருக்கு திரையுலகில் ஏராளமான நண்பர்கள் இருக்கிறார்கள் என்பது அனைவருக்குமே தெரிந்த விஷயம். அவ்வப்போது விஜய் நண்பர்கள் விஜய்யின் க்யூட் வீடியோக்களையும், அவருடன் தங்களுக்குடனான நினைவுகளையும் பகிர்ந்து கொள்வது வழக்கம்.
இந்நிலையில் தற்போது விஜய்யின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான நடிகர் ஸ்ரீமன், விஜய் இருக்கும் க்யூட் வீடியோ ஒன்றை வெளியிட்டு எஸ்பிபி அவர்களுக்கு கூட்டுப் பிரார்த்தனை செய்வோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் ஸ்ரீமன் விஜய்யுடன் பல படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் அடுத்து வெளிவரவிருக்கும் “மாஸ்டர்” திரைப்படத்திலும் ஸ்ரீமன் ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில் இவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான நண்பன் திரைப்படத்தில் வரும் “ஆல் இஸ் வெல்” என்ற வசனம் கொண்ட வீடியோ ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ குறித்து தெரிவித்துள்ளதாவது “நீ வேற லெவல் நண்பா. செம க்யூட்டான கிளிப். இந்த வீடியோவில் வரும் உணர்ச்சிபூர்வமான கருத்துக்கள் என் மனதை தொட்டது. என் நண்பர் ஒருவர் இதை என்னுடன் பகிர்ந்திருந்தார் இதை பார்த்ததும் நான் பாசிட்டிவாக உணர்ந்தேன். நாம் அனைவரும் எஸ்பிபி காக கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபடுவோம். இந்த உலகம் விரைவில் கொரோனாவிலிருந்து விடுபடவேண்டும்” என்று பதிவிட்டுள்ளார் ஸ்ரீமன்.
U are vera level”NANBA”Semma cute clip. Why I felt like posting,it’s not about cute expressions,saw it in friend’s status message, I personally felt so positive when I saw it. let us all pray today for SPB SIR kootu prathanai at 6 pm. Let the world be free from corona soon pic.twitter.com/3RGZOwvO9C
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.