தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து தற்போது குணச்சித்திர நடிகராக நடித்து வருபவர் நடிகை ராதிகா சரத்குமார். இவர் தனது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார்.
பாரதிராஜா இயக்கத்தில் 1978 ஆம் வருடம் வெளியான “கிழக்கே போகும் ரயில்” படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு ஹீரோயினாக அறிமுகமானவர் ராதிகா சரத்குமார். பின்னர் ரஜினி, கமல், மோகன், சரத்குமார், விஜயகாந்த் என அப்போதைய முன்னணி ஹீரோக்கள் அனைவருடனும் ஹீரோயினாக இவர் நடித்துள்ளார்.
தமிழ் மட்டுமின்றி மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி மொழிப் படங்களிலும் இவர் நடித்துள்ளார். 1985 ஆம் வருடம் வெளியான “மீண்டும் ஒரு காதல் கதை” படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் உருவெடுத்தார்.
இவர் வெள்ளித்திரை மட்டுமல்லாது சின்னத்திரையிலும் ஜொலித்து வருபவர். நடிகை, தயாரிப்பாளர் என்று பன்முகத் திறமைகளை கொண்ட ராதிகா சரத்குமார் இன்று தனது பிறந்தநாளை தனது குடும்பத்துடன் கொண்டாடி வருகிறார். பல முன்னணி ஹீரோக்களுடனும் இயக்குனர்களுடனும் பணிபுரிந்துள்ள ராதிகா சரத்குமார் தற்போது முன்னணி ஹீரோக்களுக்கு தாய் வேடத்தில் நடித்து அசத்தி வருகிறார்.
சமீபத்தில் இவர் 42 வருடங்களை திரையுலகில் நிறைவு செய்ததை அனைவரும் கொண்டாடினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.