“வாரணம் ஆயிரம்” திரைப்படத்தில் சின்ன கதாபாத்திரத்தில் அறிமுகமாகி தனுஷின் வேலையில்லா பட்டதாரியில் அமுல்பேபியாக நடித்து ரசிகர்களிடையே தனி இடத்தை பிடித்தவர் அமிதாஷ் பிரதான்.
தற்போது “தள்ளிப்போகாதே” என்ற படத்தில் நடித்திருந்த இவர் லாக்டோன் காரணங்களால் இந்த படத்தின் வெளியீடு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த லாக்டவுனை தனக்கு சாதகமாக்கி தன்னிடம் உள்ள இசை ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
தற்போது அமிதாஷ் நடித்து பாடியுள்ள “கொரோனா கண்ணால” சிங்கிள் பாடல் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த பாடலுக்கு இயக்குனர் விக்னேஷ் சிவன் வரிகளை எழுதியுள்ளார். மேலும் அனிருத் விஜய் இந்த பாடலுக்கு இசையமைத்துள்ளார்.
இந்தப் பாடல் உருவானதில் தன் அனுபவம் குறித்து பகிர்ந்துள்ள அமிதாஷ், லாக்டவுன் ஆரம்பித்ததால் என் தள்ளிப்போகாதே படம் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது, இதனால் மனமுடைந்து போவதைவிட என் இசை ஆர்வத்தை வெளிக் கொண்டுவர முடிவு செய்து இந்த பாடலை உருவாக்கியுள்ளோம். என் நெருங்கிய நண்பரான அனிருத் இசையில் அவ்வளவு ஆர்வம் காட்டியபோது நான் எப்போதுமே திகைத்து பார்த்திருக்கிறேன். அந்த ஜர்னி இப்பொழுதுதான் புரிந்துகொள்ள முடிந்தது.
எனக்கு இந்த பாடலை உருவாக்க சிந்தனை வந்ததும் அனி விஜய்க்கு போன் செய்து கூறினேன், உடனே இந்த பாடல் வேலைகளை தொடங்கிவிட்டோம். தற்போது இந்த பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளதில் மகிழ்ச்சி அடைந்துள்ளேன் என்று மிகுந்த உற்சாகத்துடன் கூறியுள்ளார்.