வைரமுத்துவின் வைரலாகும் மறைந்த நீதிபதி குறித்த கவிதை!
August 27, 2020 / 03:58 PM IST
|Follow Us
உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.ஆர்.லக்ஷ்மணன் அவர்கள் காலமானார். இவருக்கு வயது 78. திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த இவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை காலமானார்.
மறைந்த உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி லக்ஷ்மணனின் உடல் தேவகோட்டைக்கு தற்போது கொண்டு செல்லப்பட்டுள்ளது. இவரது இறுதி சடங்குகள் தற்போது நடைபெற்று வருகிறது.
இவர் முல்லை பெரியாறு பிரச்சனை, பொது இடங்களில் புகை பிடிக்க கூடாது போன்ற சர்ச்சை மிகு பிரச்சனைகளை கையாண்டு அதுமட்டுமின்றி பரபரப்பான தீர்ப்புகளை வழங்கியவர் ஆவார்.
இவர் திடீரென காலமானது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தற்போது இவரின் மறைவு குறித்து கவிப்பேரரசு வைரமுத்து உருக்கமான கவிதை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
“நீதிமன்றத்தின் நெடுந்தூண் சாய்ந்ததே” என்ற இந்த உருக்கமான கவிதை தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. கவிப்பேரரசு வைரமுத்து எழுதியுள்ளதாவது,
“நீதியரசர்
ஏ.ஆர்.லட்சுமணன் மறைந்தாரே!
நீதிமன்றத்தின்
நெடுந்தூண் சாய்ந்ததே!
தமிழர்களின்
இந்திய அடையாளம் அழிவுற்றதே!
கலைஞர் வெளியிடக்
கருவாச்சி காவியம்
முதற்படி பெற்ற பெருமகனாயிற்றே!
இனி எங்கு பெறுவோம்
அவர் போலொரு தங்கச் சிங்கத்தை!
அனைவர்க்கும்
என் அழுகை இரங்கல்.
என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த உருக்கமான கவிதையை படித்த பலர் முன்னாள் நீதிபதி லக்ஷ்மணனுக்கு தங்கள் இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.