நடிகர் விஜய் வசந்தின் தந்தை வசந்தகுமார் கொரோனாவால் காலமானார்!
August 29, 2020 / 01:11 PM IST
|Follow Us
சென்னை 600028, நாடோடிகள், மங்காத்தா போன்ற படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர் விஜய் வசந்தின் தந்தை மற்றும் பிரபல தொழிலதிபர் மற்றும் அரசியல்வாதியான வசந்தகுமார் வெள்ளிக்கிழமை இரவு 7 மணிக்கு காலமானார்.
கொரோனா சிகிச்சைக்காக ஆகஸ்ட் பத்தாம் தேதி முதல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்த இவர் சிகிச்சை பலனின்றி வெள்ளி இரவு 7 மணிக்கு திடீரென காலமானார் என்ற செய்தி தற்போது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல அரசியல் தலைவர் மட்டுமல்லாது வசந்த் அன் கோ என்ற பெரிய நிறுவனத்தின் நிறுவருமான வசந்தகுமார், கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்துள்ளார்.
72 வயதான இவர் தற்போது சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவர் கன்னியாகுமரி தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் எம்பி யாக இருந்து வந்துள்ளார். மேலும் வசந்த் டிவி என்ற தொலைக்காட்சி நிறுவனத்தையும் நடத்தி வந்துள்ளார். இவர் திடீரென உயிரிழந்தது அனைவரிடத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
*கன்னியாகுமரி காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார்காலமானார் – அவருக்கு வயது 70*
*சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு*
*ஆகஸ்ட் 10 முதல் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழப்பு*
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.