“மம்மி சேவ் மி” ஒரே நாளில் இவ்வளவு பார்வையாளர்களா?!
August 31, 2020 / 08:07 PM IST
|Follow Us
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதனால் திரைப்பட படப்பிடிப்புகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது திரையரங்குகள் மூடப்பட்டுள்ளது.
தற்போது திரைப்பட படப்பிடிப்புகள் நடத்துவதற்கான தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் திரையரங்குகள் திறப்பதற்கான எந்த ஒரு அறிகுறியும் இல்லை.
இந்நிலையில் பெரிய நடிகர்கள் திரைப்படங்கள் உட்பட பல திரைப்படங்கள் ஓடிடி தளங்களில் வெளியாகி வருகிறது. இந்நிலையில் தற்போது சூர்யா நடிப்பில் சூரரைப்போற்று திரைப்படம் ஓடிடியில் வெளியாவது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இந்த வரிசையில் சி.வேல்மதி இயக்கத்தில் ஜே.சதீஷ்குமார் தயாரிப்பில் உருவாகிவரும் “அண்டாவ காணோம்” திரைப்படம் ஆகஸ்ட் 28ஆம் தேதி ஜேஎஸ்கே பிரைமில் வெளியாகவிருந்தது. ஆனால் சில காரணங்களால் தள்ளிவைக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து கடந்த 29-ஆம் தேதி ஜேஎஸ்கே பிரைமில் “மம்மி சேவ் மி” என்ற த்ரில்லர் திரைப்படம் வெளியானது. தற்போது இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் சுமார் 15 ஆயிரம் பார்வையாளர்கள் ஒரே நாளில் இந்த படத்தை பார்த்துள்ளதாக மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்கள். இந்த படத்திற்கு ரூபாய் 60 என ஆன்லைன் கட்டணம் நிர்ணயித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
15000 plus views within 24 hrs great response for horror-thriller #MummySaveMe on the @JskPrime app.
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.