தமிழ் சினிமாவில் வெளியான காமெடி காட்சிகளில் வரும் டயலாக்குகள் மற்றும் பிரபல காமெடி நடிகர்களின் கதாபாத்திரத்தின் பெயர்கள் படத்திற்கு டைட்டிலாக வருவது தற்போது ட்ரெண்டாகி வருகிறது.
இந்நிலையில் வடிவேலுவின் மிகவும் பிரபலமான கதாபாத்திரத்தின் பெயரான சூனாபானா என்ற டைட்டிலுடன் தற்போது ஒரு படம் உருவாகி வருகிறது.
இந்த படத்தை “குள்ளநரி கூட்டம்” படத்தை இயக்கிய ஸ்ரீ பாலாஜி இயக்குகிறார். சுமார் பத்து வருடங்களுக்கு பின் இந்த படத்தை அவர் இயக்குகிறார், இதற்கு முன்னர் நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் ரம்யா நம்பீசனுடன் குள்ளநரி கூட்டத்தில் பணிபுரிந்துள்ளார்.
சூனாபானா படத்தில் நடிகர் நிஜய் ஹீரோவாக நடிக்கிறாராம். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல்லில் நடைபெற்று வருகிறதாம். படப்பிடிப்பு தளத்திலிருந்து நடிகர் சாம்ஸ் புகைப்படங்களை வெளியிட்டு , ஆரம்பமானது சூட்டிங். உற்சாகம் களைகட்டியது, கேப்சர் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் குள்ளநரி கூட்டம் புகழ் ஸ்ரீ பாலாஜி இயக்கத்தில் “சூனா பானா” திண்டுக்கல்லில் பரபரப்பாக உருவாகிறது. தமிழக அரசுக்கு நன்றிகள் கோடி என்று உற்சாகமாக குறிப்பிட்டுள்ளார்.