வேட்டி சட்டை அணிந்து சூப்பராக போஸ் கொடுத்த ‘பிக் பாஸ்’ சாக்ஷி… குவியும் லைக்ஸ்! ‘கொரோனா’ பிரச்சனையால் திரையுலகில் அனைத்து படங்களின் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டது, திரையரங்குகளும் மூடப்பட்டது. சமீபத்தில், 75 நபர்களை மட்டும் வைத்து சில நிபந்தனைகளுடன் ஷூட்டிங் எடுக்க அரசாங்கம் அனுமதி கொடுத்து விட்டது. கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் சில படங்களின் ஷூட்டிங் துவங்கியுள்ளது. அடுத்தடுத்து பல படங்களுக்கு கால்ஷீட் கொடுத்து செம பிஸியாக நடித்து வந்தார்கள் ஹீரோயின்ஸ்.
ஆனால், கடந்த சில மாதங்களாக லாக் டவுன் டைமில் தான் நடிகைகளுக்கு அதிக நேரம் கிடைத்திருந்தது. ஆகையால், அவரவர்கள் தங்களுக்கு பிடித்தமான விஷயத்தில் கவனம் செலுத்தி லாக் டவுனை பயனுள்ளதாக மாற்றினார்கள். சிலர், இதுவரை தெரியாத பல புதிய விஷயங்களையும் கற்றுக் கொண்டார்கள். ‘பிக் பாஸ்’ மூலம் ஃபேமஸான நடிகை சாக்ஷி அகர்வால்.
இப்போது சாக்ஷி அகர்வால் நடிப்பில் ‘சிண்ட்ரெல்லா, ஆயிரம் ஜென்மங்கள், டெடி, அரண்மனை 3, புரவி’ என ஐந்து படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் அசத்தலான புதிய ஸ்டில்ஸை வெளியிட்டுள்ளார். வேட்டி சட்டை அணிந்து சாக்ஷி அகர்வால் போஸ் கொடுத்துள்ள இந்த ஸ்டில்ஸ் ரசிகர்களை ‘வாவ்’ சொல்ல வைத்திருக்கிறது.
Friday special
pic.twitter.com/QDzR0RB39U
— Sakshi Agarwal (@ssakshiagarwal) September 4, 2020