சூர்யாவுடன் நடித்த நடிகை சினிமாவை விட்டு ஒரே படத்தில் நீங்கினார்!
September 9, 2020 / 09:00 AM IST
|Follow Us
1997 ஆம் வருடம் வசந்த் இயக்கத்தில் மணி ரத்னம் தயாரிப்பில் வெளியான “நேருக்குநேர்” படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டார் சூர்யா.
ஒரு சுவாரஸ்யமான தகவல் என்னவென்றால் இவருக்கு சூர்யா என்ற பெயரை மணிரத்னம் தான் வைத்துள்ளார். இவரது இயற்பெயர் சரவணன். அதுமட்டுமின்றி 1995 ஆம் வருடம் “ஆசை”யெனும் வசந்த் படத்தில் நடிப்பதற்கு இவரை அணுகியதாகவும், நடிப்பில் அவ்வளவாக ஆர்வம் இல்லாததால் இதை நடிகர் சூர்யா நிராகரித்ததாகவும் கூறப்படுகிறது.
இவரின் முதல் படமான “நேருக்கு நேர்” படத்தில் நடிகர் விஜய்யுடன் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பிறகு முன்னணி ஹீரோக்களுடன் நடித்து வந்த சூர்யா, 1999ஆம் வருடம் “பூவெல்லாம் கேட்டுப்பார்” எனும் படத்தில் நடிகை ஜோதிகாவுடன் இணைந்து ஹீரோவாக நடித்தார்.
பின்பு இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளியான “நந்தா” திரைப்படம்தான் நடிகர் சூர்யாவுக்கு ஒரு மைல்கல்லாக அமைந்தது. இந்த படத்தில் அவரது சிறந்த நடிப்பிற்காக பெரிய பாராட்டுகளைப் பெற்றார்.தமிழ்நாடு மாநில அரசின் சிறந்த நடிகருக்கான விருதை பெற்றார்.
இதை தொடர்ந்து விக்ரமன் இயக்கத்தில் “உன்னைநினைத்து” மற்றும் அமீர் இயக்கத்தில் “மௌனம் பேசியதே” ஆகிய திரைப்படங்கள் மூலம் தனக்கென பெரிய ரசிகர் கூட்டத்தை பெற்றார் நடிகர் சூர்யா.
அதில் தொடங்கி கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் காக்க காக்க, பாலா இயக்கத்தில் பிதாமகன், பேரழகன், கஜினி, சில்லுனு ஒரு காதல், வாரணம் ஆயிரம், அயன், சிங்கம், ஏழாம் அறிவு, 24, காப்பான், என் ஜி கே போன்ற வெற்றி படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் நீங்காத இடத்தை பிடித்துள்ளார்.
இவ்வளவு புகழ்பெற்ற நடிகர் சூர்யாவுடன் ஒரே படத்தில் நடித்து விட்டு பின்பு சினிமாவுக்கு முழுக்கு போட்டுள்ளார் ஒரு நடிகை. ஆம்! 2006 ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான புதிய திரைப்படத்தில் இவருடன் நடித்த ஸ்ருதிகா இந்த படத்தோடு சினிமாவில் நடிப்பதை கைவிட்டுள்ளார். இந்த படத்தின் இயக்குனர் புஷ்பவாசகனிடம் நடிக்க தெரியாததற்காக அதிக திட்டு வாங்கி விட்டார் என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார் இந்த ஹீரோயின்.