டைம் டிராவல் வெப் சீரிஸான ‘டைம் என்ன பாஸ்’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!
September 18, 2020 / 08:40 PM IST
|Follow Us
‘கொரோனா’ பிரச்சனையால் இப்போது அனைத்து திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளது. இதனால், தயாரிப்பாளர்கள் படங்களை நேரடியாக OTT-யில் ரிலீஸ் செய்து வருகிறார்கள். சமீபத்தில், ஜோதிகா நடித்துள்ள ‘பொன்மகள் வந்தாள்’, கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ‘பெண்குயின்’, யோகி பாபு நடித்துள்ள ‘காக்டெய்ல்’, வரலக்ஷ்மி சரத்குமார் நடித்துள்ள ‘டேனி’, வைபவ் நடித்துள்ள ‘லாக்கப்’ ஆகிய தமிழ் படங்கள் OTT-யில் வெளி வந்தது.
பிரபல தயாரிப்பு நிறுவனமான ‘கவிதாலயா’ OTT-க்காக தயாரித்துள்ள வெப் சீரிஸ் ‘டைம் என்ன பாஸ்’. இந்த வெப் சீரிஸை ‘சுட்ட கதை’ படத்தின் இயக்குநர் சுபு இயக்கி உள்ளாராம். டைம் டிராவல் கதைக்களம் கொண்ட இவ்வெப் சீரிஸில் பரத், ப்ரியா பவானி ஷங்கர் ஜோடியாக நடித்துள்ளனர்.
மேலும், முக்கிய ரோல்களில் கருணாகரன், ரோபோ ஷங்கர், அலெக்சாண்டர் பாபு, சஞ்சனா சாரதி மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த வெப் சீரிஸ் இன்று (செப்டம்பர் 18-ஆம் தேதி) ‘அமேசான் ப்ரைம்’-யில் ரிலீஸாகியுள்ளது. இப்போது இவ்வெப் சீரிஸை ‘அமேசான் ப்ரைம்’ டிஜிட்டல் பிளாட்ஃபார்மில் பார்த்த ரசிகர்கள், வெப் சீரிஸ் நன்றாக இருந்ததா? இல்லையா? என தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.
2 Episodes done. Exciting concept spoiled by lackluster screenplay and flat jokes. Unable to watch the stars on screen with different dubbed voice. #TimeEnnaBoss@PrimeVideo