OTT-யில் ரிலீஸாகிறதா விஜய்யின் ‘மாஸ்டர்’?… இயக்குநர் லோகேஷ் கனகராஜே சொன்ன தகவல்!
September 23, 2020 / 04:02 PM IST
|Follow Us
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய். இவரது ரசிகர்கள் ‘தளபதி’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். விஜய்யின் கடைசி படமான ‘பிகில்’ கடந்த ஆண்டு வெளியாகி மாஸ் ஹிட்டானது. இவர் நடித்திருக்கும் புதிய படமான ‘மாஸ்டர்’ ரிலீஸுக்கு வெயிட்டிங் லிஸ்டில் உள்ளது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளாராம்.
இதில் தளபதிக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். தளபதிக்கு எதிரியாக விஜய் சேதுபதி நடித்துள்ளாராம். ‘கொரோனா’ பிரச்சனையால் இப்போது அனைத்து திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளது. இதனால், சில தயாரிப்பாளர்கள் படங்களை நேரடியாக OTT-யில் ரிலீஸ் செய்து வருகிறார்கள். சமீபத்தில், ஜோதிகா நடித்துள்ள ‘பொன்மகள் வந்தாள்’, கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ‘பெண்குயின்’, யோகி பாபு நடித்துள்ள ‘காக்டெய்ல்’, வரலக்ஷ்மி சரத்குமார் நடித்துள்ள ‘டேனி’, வைபவ் நடித்துள்ள ‘லாக்கப்’ ஆகிய தமிழ் படங்கள் OTT-யில் வெளி வந்தது.
சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ படம் அக்டோபர் 30-ஆம் தேதியும், விஜய் சேதுபதியின் ‘க/பெ.ரணசிங்கம்’ படம் அக்டோபர் 2-ஆம் தேதியும் OTT-யில் ரிலீஸாக உள்ளது. இந்நிலையில், இது தொடர்பாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மீடியாவுக்கு கொடுத்த ஒரு பேட்டியில் “மாஸ்டர் திரைப்படத்தை OTT-யில் ரிலீஸ் செய்ய மாட்டோம். கண்டிப்பாக தியேட்டரில் தான் ரிலீஸ் செய்வோம். திரையரங்குகளை திறந்தவுடன் ரிலீஸ் தேதியை ஃபிக்ஸ் செய்து கொள்ளலாம் என காத்துக் கொண்டிருக்கிறோம்” என்று கூறியுள்ளார்.