உலகநாயகன் கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன் நடிகர், பாடகர் என பன்முகத் திறமைகளை தன் தந்தையைப் போலவே கொண்டவராவார். 2000ஆம் ஆண்டு வெளிவந்த கமல்ஹாசனின் படமான “ஹேராம்” இல் குழந்தை நட்சத்திரமாக ஸ்ருதிஹாசன் திரையுலகுக்கு அறிமுகப்படுத்தப்பட்டார்.
தமிழில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் 2011ம் ஆண்டு வெளிவந்த”ஏழாம் அறிவு” திரைப்படத்தில் ஹீரோயினாக நடிக்கத் தொடங்கினார். அதிலிருந்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிப்படங்களில் நடிகையாக வலம் வந்தார்.
இவர் கமலஹாசனின் ‘தேவர் மகன்’ படத்தில் “போற்றி பாடடி பொண்ணே” பாடலில் குழந்தை பாடகராக முதன்முதலில் பாடியிருப்பார். இதில் ஆரம்பித்து கடைசியாக “கடாரம்கொண்டான்”படத்தை ‘கடாரம் கொண்டான்’ என்ற பாடலை பாடியதுவரை பாடகராக தனக்கென தனி இடத்தை மக்களிடம் பிடித்துள்ளார்.
இந்த லாக்டவுனில் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் ஸ்ருதிஹாசன், அவரது புகைப்படங்களையும் பாடல் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார். தற்போது தன் சிறுவயது புகைப்படம் ஒன்றை வெளியிட்டு “தான் சிறுவயதில் ஒரு குறங்கு” என்ற கேப்ஷனுடன் நகைச்சுவையாக பதிவிட்டுள்ளார்.