• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » பிக்பாஸ் 4 போட்டியாளர்கள் பற்றிய அதிர்ச்சியூட்டும் உண்மைகள்!

பிக்பாஸ் 4 போட்டியாளர்கள் பற்றிய அதிர்ச்சியூட்டும் உண்மைகள்!

  • October 10, 2020 / 08:29 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
பிக்பாஸ் 4 போட்டியாளர்கள் பற்றிய அதிர்ச்சியூட்டும் உண்மைகள்!

Click Here For 1 to 8 contestants 

9.நடிகர் ஆரி:

2005 ஆம் ஆண்டு டி.வி.சந்திரன் இயக்கத்தில் வெளியான ஆடும் கூத்து என்ற திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகர். இந்தப் படத்தை தொடர்ந்து ரெட்டைச்சுழி, மாலைப் பொழுதின் மயக்கத்திலே, நெடுஞ்சாலை, தரணி, மாயா, உன்னோடு கா, முப்பரிமாணம், நாகேஷ் திரையரங்கம் போன்ற படங்களில் ஹீரோவாகவும் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்து தனக்கென தனி இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார். தற்போது “அலேக்கா” மற்றும் “எல்லாம் மேல இருக்குறவன் பார்த்துப்பான்” போன்ற படங்களில் நடித்துவந்த ஆரி, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசனில் ஒரு பங்கேற்பாளர். சினிமா துறைக்கு வருவதற்கு முன்பே தியேட்டர் ஆர்ட்டிஸ்ட் ஆகவும், சினிமா பிரபலங்களுக்கு ஃபிட்னஸ் ட்ரெய்னராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் கடந்த 2015ஆம் ஆண்டு நதியா என்பவரை திருமணம் செய்து கொண்டு, இப்போது அவருக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறாள். அதுமட்டுமின்றி இவரை பற்றிய சுவாரஸ்யமான தகவல் என்னவென்றால் இவர் இரண்டு முறை கின்னஸ் சாதனை படைத்துள்ளார். ஒருமுறை ஒரு வெள்ளை போர்டில் அதிகமாக கையொப்பமிட்டததற்கும், மற்றொரு முறை சுமார் 3000 மாணவர்களுடன் சீட்லிங்ஸ் டிரான்ஸ்பிளாண்டிங் செய்ததற்கும் கின்னஸ் சாதனை படைத்துள்ளார். மேலும் முன்னேற்றப்பாதையில் இளைய தலைமுறையை வழி நடத்தியதற்காக டிரைகோனா அவார்ட்ஸ் வழங்கும் “யூத் ஐகான்” என்ற பட்டத்தையும் பெற்றுள்ளார்.

10. மாடல் சோமசேகர்:

பிக்பாஸ் 4 வீட்டிற்குள் பத்தாவது பங்கேற்பாளராக நுழைந்தவர் தான் இந்த சோமசேகர். இதற்கு முன் இவர் என்ன செய்தார் என்ற கேள்வி எழும்பி வந்த நிலையில் இவர் பிரபல மிக்ஸ்ட் மார்ஷியல் ஆர்ட்ஸ் கலைஞர் என்றும், ஏற்கனவே விஜய் டிவியில் 2010 ஆம் ஆண்டு ஒளிபரப்பான “அழகிய தமிழ்மகன்” நிகழ்ச்சியில் பங்கேற்று வெற்றி பெற்ற போட்டியாளர் என்பதும் தெரியவந்தது. அதுமட்டுமின்றி பல அட்வர்டைஸ்மென்ட்களிலும் இவர் மாடலாக வந்திருக்கிறாராம். முன்னேறத் துடிக்கும் இந்த புது முகத்திற்கு தற்போது வயது 30. சென்னையில் பிறந்து வளர்ந்த இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை, செம ஸ்மார்ட்டாக இருக்கும் சோமசுந்தருக்கு விரைவில் பெண்கள் ஆர்மி அமைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

11. நடிகை கேப்ரில்லா:

விஜய் டிவியில் 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜோடி நம்பர் 1 ஜூனியர் பிரிவில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர் கேப்ரில்லா. இதில் பிரபலமான கேப்ரில்லா 2012ஆம் ஆண்டு தனுஷ் மற்றும் ஸ்ருதிஹாசன் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற “3”திரைப்படத்தில் ஸ்ருதிஹாசனுக்கு தங்கை வேடத்தில் நடித்திருப்பார். இந்த படத்தை தொடர்ந்து 2013 ஆம் ஆண்டு வெளியான “சென்னையில் ஒரு நாள்” திரைப்படத்தில் பிரகாஷ்ராஜின் மகள் வேடத்தில் நடித்திருந்தார். அதுமட்டுமின்றி “அப்பா” என்ற படத்திலும் நடித்திருந்தார். இது மட்டுமின்றி விஜய் டிவியில் உள்ள மற்ற டான்ஸ் நிகழ்ச்சிகளிலும் பங்கு பெற்று வெற்றி பெற்றார். விஜய் டிவியின் ப்ராடக்ட் ஆன இவர், தற்போது பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். இனி தொடர்ந்து சினிமா வாய்ப்புகள் இவரைத் தேடி வரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

12. நகைச்சுவை பேச்சாளர் அறந்தாங்கி நிஷா:

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அறந்தாங்கி என்ற கிராமத்தில் பிறந்த நிஷா சுமார் 800க்கும் மேற்பட்ட மேடை நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டு தன் நகைச்சுவை பேச்சின் மூலம் ரசிகர்களை ஈர்த்தவர். இவர் விஜய் டிவியில் நடைபெற்ற “கலக்கப்போவது யாரு சீசன் 5” நிகழ்ச்சியில் பங்கேற்று தன் சிறப்பான நகைச்சுவை பேச்சின் மூலம் இரண்டாவது இடத்தை பிடித்தார். இந்த வெற்றியை தொடர்ந்து வெள்ளித்திரை பக்கம் சென்ற இவர் முதலில் சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான “கலகலப்பு 2” திரைப்படத்தில் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதை தொடர்ந்து பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் “இரும்புத்திரை” படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. அதுமட்டுமின்றி தனுஷ் நடிப்பில் “மாரி 2” என்ற திரைப்படத்திலும் இவர் நடித்துள்ளார். தொடர்ந்து பெரிய நடிகர்களின் படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்து வந்த நிலையில் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் “கோலமாவு கோகிலா” படத்திலும் இவர் ஒரு நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதுமட்டுமின்றி “ஆண் தேவதை” என்ற திரைப்படத்திலும் இவர் நடித்திருந்தார். தொடர்ந்து திரைப்படங்களில் தன் நகைச்சுவை திறனைக் காட்டி வந்த இவருக்கு பிக்பாஸ்4 நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கான அரிய வாய்ப்பு கிடைத்தவுடன் அதை பயன்படுத்திக் கொண்டுள்ளார்.

13. நடிகை ரம்யா பாண்டியன்:

பிரபல இயக்குனரான மணிரத்னம் அவர்களின் சிஷ்யன் ஷெல்லி இயக்கத்தில் உருவாகவிருந்த “மானே தேனே பொன்மானே” என்ற குறும் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு ரம்யா பாண்டியனுக்கு கிடைத்ததாம். ஆனால் சில காரணங்களால் தட்டிப் போன இந்த வாய்ப்பை தொடர்ந்து, 2015 ஆம் ஆண்டு வெளியான “டம்மி டப்பாசு” என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இதைத்தொடர்ந்து 2016ஆம் ஆண்டு குரு சோமசுந்தரத்தின் ஜோடியாக “ஜோக்கர்” என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அதுமட்டுமின்றி 2018 ஆம் ஆண்டு “ஆண் தேவதை” என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படங்களின் மூலம் தமிழில் தனக்கென தனி இடத்தை தக்க வைக்க முயற்சி செய்து வந்த ரம்யா பாண்டியன் 2019ஆம் ஆண்டு விஜய் டிவியில்‌ “குக் வித் கோமாளி” என்ற நிகழ்ச்சியில் பங்கேற்பாளராக உள்ளே வந்தார். இதைதொடர்ந்து “கலக்கப்போவது யாரு சீசன் 9″இல் நடுவராக இருந்தார். இதன் மூலம் மக்களிடையே பரிட்சையைப்படும் முகமாக இருந்த ரம்யா பாண்டியன் தற்போது பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் ஒரு பங்கேற்பாளர். அதுமட்டுமின்றி 2டி என்டர்டெயின்மென்ட் மற்றும் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் இரண்டு படங்களில் நடிப்பதற்கு இவர் ஒப்பந்தமாகி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் நடிக்கவிருக்கும் காட்சிகள் ஏற்கனவே படமாக்கப்பட்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர் பிரபல நடிகர் அருண்பாண்டியனின் நெருங்கிய உறவினராவார்.

14. நடிகை சம்யுக்தா கார்த்திக்:

சம்யுக்தா கார்த்திக் என்றழைக்கப்படும் சம்யுக்தா சண்முகநாதன் ராதிகா சரத்குமாரின் “சந்திரகுமாரி” என்ற சீரியலில் நடித்ததன் மூலம் புகழ் பெற்றவர். இவர் ஒரு நடன கலைஞர் மற்றும் நியூட்ரிஷனிஸ்ட். ஏற்கனவே பல வருடங்களாக மாடலிங் துறையில் புகழ்பெற்று விளங்குபவர். 36 வயதான இவருக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளார். மலையாளத்தில் ஷாஜி என் கருண் இயக்கத்தில் உருவான “ஓளூ” என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் நடிகையாக உருவெடுத்த இவர், தற்போது கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் ஒரு பங்கேற்பாளர். சினிமா துறையில் சாதிக்க வேண்டும் என்ற துடிப்புடன் களமிறங்கியுள்ள சம்யுக்தா 2007ம் ஆண்டு “மிஸ் சென்னை” பட்டம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. சினிமா துறைக்கு வருவதற்கு முன்பு ஐடி துறையில் சில வருடங்கள் பணி புரிந்தார். பெண் மாடலாக இருந்து தற்போது வளர்ந்து வரும் நடிகைகள் பட்டியலில் இவரும் ஒருவர்.

15. நடிகர் சுரேஷ் சக்ரவர்த்தி:

சுரேஷ் சக்கரவர்த்தி நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முக திறமைகளைக் கொண்டவர் ஆவார். 1991 ஆம் வருடம் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான “அழகன்” என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். அதுமட்டுமின்றி இவர் சிறந்த சமையல் கலை நிபுணரும் ஆவார், இதற்கு இவர் ஒரு தனி யூடியூப் சேனலையும் நடத்தி வருகிறார். இவருடைய இன்ஸ்டாகிராம் பக்கம் முழுவதும் ருசிகர சமையல் குறிப்புகளுடன் நிறைந்திருக்கும். பன்முக திறமைகளை கொண்ட இந்த நடிகர் தற்போது பிக்பாஸ்4 நிகழ்ச்சியில் பங்கு கொண்டதன் மூலம் மக்களிடையே பரிட்ச்சயப்பட்டுள்ளார்.

16.சூப்பர் சிங்கர் ஆஜித்:

விஜய் டிவியில் 2012 ஆம் ஆண்டு ஒளிபரப்பான “சூப்பர் சிங்கர் ஜூனியர் 3” நிகழ்ச்சியில் பங்கு கொண்டு வெற்றி பெற்றதன் மூலம் தமிழ் ரசிகர்களிடையே தன் இனிமையான குரலால் பிரபலமடைந்தவர் பாடகர் ஆஜித். சிறுவயதிலேயே அதிக அளவில் பாடல்களைப் பாடி அதன் மூலம் புகழ் பெற்று பின்பு சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தமிழ் திரையுலகில் கால் பதித்தவர். பின்பு தமிழ் திரையுலகில் பாடகராக அறிமுகமாகி 2014 ஆம் ஆண்டு வெளியான பூவரசம்பீபீ என்ற படத்தில் மூன்று பாடல்களை பாடியிருந்தார். எனக்கொன்றும் வான்வெளி, திக்கி திணறுது, கோ கோ கோ மற்றும் ஆங்கிரி பேர்ட்ஸ் என்ற பாடல்களைப் பாடி தனக்கென தனி இடத்தை தக்க வைத்துக் கொண்டார். சமூக வலைதளங்களில் இவரது பாடல்கள் எங்கு திரும்பினாலும் ஒலிக்கும் அளவிற்கு ஒரு காலத்தில் இவர் குரல் மிகவும் போற்றப்பட்டது. நடுவில் சில வருடங்கள் இடைவெளி விட்டு காணாமல் போயிருந்த பாடகர் ஆஜித் தற்போது கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ்4 போட்டியில் இவர் தான் கடைசி பங்கேற்பாளராக உள்ளே நுழைந்தார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Bigg boss
  • #Bigg Boss 4
  • #bigg boss 4 Tamil
  • #Biggboss4 contestants!
  • #Shockingly facts

Also Read

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

related news

Shivani Narayanan : தொடை தெரிய போஸ் கொடுத்த ‘பிக் பாஸ்’ ஷிவானி நாராயணன்… வைரலாகும் வீடியோ!

Shivani Narayanan : தொடை தெரிய போஸ் கொடுத்த ‘பிக் பாஸ்’ ஷிவானி நாராயணன்… வைரலாகும் வீடியோ!

Joe : ‘பிக் பாஸ்’ ரியோ ராஜின் ‘ஜோ’ திரைப்படம் எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

Joe : ‘பிக் பாஸ்’ ரியோ ராஜின் ‘ஜோ’ திரைப்படம் எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

Bigg Boss 7 Tamil : “எல்லார் முன்னாடியும் அழ வச்சு அசிங்கப்படுத்துறீங்க”… கண்ணீர் விட்டு கதறி அழுத அர்ச்சனா!

Bigg Boss 7 Tamil : “எல்லார் முன்னாடியும் அழ வச்சு அசிங்கப்படுத்துறீங்க”… கண்ணீர் விட்டு கதறி அழுத அர்ச்சனா!

Bigg Boss 7 Tamil : SMALL HOUSE இல்லத்திற்கு தேர்வான வைல்ட் கார்ட் போட்டியாளர்கள்… இரு வீட்டாருக்கும் முற்றும் பகை!

Bigg Boss 7 Tamil : SMALL HOUSE இல்லத்திற்கு தேர்வான வைல்ட் கார்ட் போட்டியாளர்கள்… இரு வீட்டாருக்கும் முற்றும் பகை!

‘பிக் பாஸ்’ சாக்ஷி அகர்வாலின் பிறந்தநாள் கொண்டாட்டம்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

‘பிக் பாஸ்’ சாக்ஷி அகர்வாலின் பிறந்தநாள் கொண்டாட்டம்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

“15 பெண்களை ஏமாற்றினார்”… ‘பிக் பாஸ்’ விக்ரமன் மீது பெண் வழக்கறிஞர் பரபரப்பு புகார்!

“15 பெண்களை ஏமாற்றினார்”… ‘பிக் பாஸ்’ விக்ரமன் மீது பெண் வழக்கறிஞர் பரபரப்பு புகார்!

trending news

latest news

Thug Life : கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’… அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு நாள் குறித்த மணிரத்னம்!

Thug Life : கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’… அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு நாள் குறித்த மணிரத்னம்!

1 year ago
Inga Naan Thaan Kingu : சந்தானத்தின் ‘இங்க நான் தான் கிங்கு’ ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட கமல்ஹாசன்!

Inga Naan Thaan Kingu : சந்தானத்தின் ‘இங்க நான் தான் கிங்கு’ ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட கமல்ஹாசன்!

1 year ago
SK23 : ‘சிவகார்த்திகேயன் 23’ஐ இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்… முக்கிய ரோலில் நடிக்கும் ‘சார்பட்டா பரம்பரை’ பட நடிகர்!

SK23 : ‘சிவகார்த்திகேயன் 23’ஐ இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்… முக்கிய ரோலில் நடிக்கும் ‘சார்பட்டா பரம்பரை’ பட நடிகர்!

1 year ago
Ranam & Vithaikkaaran : வைபவ்வின் ‘ரணம்’ & சதீஷின் ‘வித்தைக்காரன்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

Ranam & Vithaikkaaran : வைபவ்வின் ‘ரணம்’ & சதீஷின் ‘வித்தைக்காரன்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

1 year ago
Demonte Colony 2 : அருள்நிதியின் ஹாரர் படமான ‘டிமான்ட்டி காலனி 2’… எப்போது ரிலீஸ் தெரியுமா?

Demonte Colony 2 : அருள்நிதியின் ஹாரர் படமான ‘டிமான்ட்டி காலனி 2’… எப்போது ரிலீஸ் தெரியுமா?

1 year ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2025 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version