‘பிக் பாஸ் 4’ : கோபத்தை தூண்டும் வகையில் பேசும் சுரேஷ்… சிலையாக இருக்கும் ரியோ!
October 20, 2020 / 04:40 PM IST
|Follow Us
விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 4 கடந்த அக்டோபர் 4-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகத் துவங்கி உள்ளது . இந்த சீசன் 4-யில் கலந்து கொள்ளப்போகும் பிரபலங்கள் யார்? என தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக இருந்தார்கள். தினமும் பல பிரபலங்களின் பெயர்களை குறிப்பிட்ட வண்ணம் இருந்தது கோலிவுட் வட்டாரம்.
தொடர்ந்து 105 நாட்கள் நடைபெறவிருக்கும் இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரியோ ராஜ், நடிகை சனம் ஷெட்டி, நடிகை ரேகா, மாடல் பாலாஜி முருகதாஸ், செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத், நடிகை ஷிவானி நாராயணன், நடிகர் ஜித்தன் ரமேஷ், பாடகர் வேல்முருகன், நடிகர் ஆரி, மாடல் சோமசேகர், நடிகை கேப்ரில்லா, விஜய் டிவி அறந்தாங்கி நிஷா, நடிகை ரம்யா பாண்டியன், நடிகை சம்யுக்தா கார்த்திக், நடிகர் சுரேஷ் சக்கரவர்த்தி, ‘சூப்பர் சிங்கர்’ ஆஜித் ஆகிய 16 பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர்.
கடந்த அக்டோபர் 15-ஆம் தேதி பிக் பாஸ் வீட்டிற்குள் வைல்ட் கார்ட் மூலம் ‘விஜய் டிவி’ மற்றும் ‘ஜீ தமிழ்’ மூலம் ஃபேமஸான தொகுப்பாளினி அர்ச்சனா என்ட்ரியானார். நேற்று முன் தினம் பிக் பாஸ் ஷோவில் ரேகா எலிமினேட் செய்யப்பட்டார். தற்போது, விஜய் டிவி தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் புதிய ப்ரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளது.
இந்த ப்ரோமோ வீடியோவில் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்படும் புதிய டாஸ்கில் “அரக்கர்களும் அரக்கிகளும் உங்களை என்னதான் தொந்தரவு செஞ்சாலும், அதுக்கு ராஜ குடும்பம் எந்த ஒரு உணர்ச்சியையும் வெளிக்காட்டாமல் சிலையாகவே இருக்க வேண்டும்” என்ற கண்டிஷன் இருக்கிறது. ஆகையால், அரக்கரான சுரேஷ் சக்கரவர்த்தி “ரியோவுக்கு நான் எது சொன்னாலும் தவறா தான் இருக்கும். அதுனால நான் அவர் முன்னாடி போய் நின்னு, அவருக்கு என்ன பார்த்தாலே கோபம் வரும்” என்று சொல்கிறார். மேலும், ரியோ முன்பு அமர்ந்து அவருக்கு கோபம் வருவதுபோல் பேசுகிறார் சுரேஷ் சக்கரவர்த்தி. இவ்வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.