பாலாஜியை அழ வைத்த அர்ச்சனா…வெளியானது ‘பிக் பாஸ் 4’ புது ப்ரோமோ!
October 28, 2020 / 12:24 PM IST
|Follow Us
விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 4 கடந்த அக்டோபர் 4-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகத் துவங்கி உள்ளது . இந்த சீசன் 4-யில் கலந்து கொள்ளப்போகும் பிரபலங்கள் யார்? என தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக இருந்தார்கள். தினமும் பல பிரபலங்களின் பெயர்களை குறிப்பிட்ட வண்ணம் இருந்தது கோலிவுட் வட்டாரம்.
தொடர்ந்து 105 நாட்கள் நடைபெறவிருக்கும் இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரியோ ராஜ், நடிகை சனம் ஷெட்டி, நடிகை ரேகா, மாடல் பாலாஜி முருகதாஸ், செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத், நடிகை ஷிவானி நாராயணன், நடிகர் ஜித்தன் ரமேஷ், பாடகர் வேல்முருகன், நடிகர் ஆரி, மாடல் சோமசேகர், நடிகை கேப்ரில்லா, விஜய் டிவி அறந்தாங்கி நிஷா, நடிகை ரம்யா பாண்டியன், நடிகை சம்யுக்தா கார்த்திக், நடிகர் சுரேஷ் சக்கரவர்த்தி, ‘சூப்பர் சிங்கர்’ ஆஜித் ஆகிய 16 பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
கடந்த அக்டோபர் 15-ஆம் தேதி பிக் பாஸ் வீட்டிற்குள் வைல்ட் கார்ட் மூலம் ‘விஜய் டிவி’ மற்றும் ‘ஜீ தமிழ்’ மூலம் ஃபேமஸான தொகுப்பாளினி அர்ச்சனா என்ட்ரியானார். கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை பிக் பாஸ் ஷோவில் ரேகா எலிமினேட் செய்யப்பட்டார். தற்போது, விஜய் டிவி தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் புதிய ப்ரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளது. இந்த ப்ரோமோ வீடியோவில் “எட்டிப்பார்க்க முடியல வந்து சொல்லு இப்படிலாம் எதுவுமே நான் பேசல” என்று அர்ச்சனா பேசுகிறார். அதற்கு பாலாஜி முருகதாஸ் “கேப்டன் பண்ணது எனக்கு பிடிக்கல. அதுனால எனக்கு கேப்டனும் பிடிக்கல” என்று பேசுகிறார்.
பின், அர்ச்சனா “இதெல்லாம் provoke பண்ணவே கூடாது. நாங்க அய்யய்யோ பாலா சார் வந்து சொல்லிட்டாருங்க, நாங்க இப்ப எதுவுமே பண்ண முடியாது, நாங்க wait பண்ணிட்டே பாலா சார் வருவாரா, பாலா சார் வருவாரான்னு நாங்க wait பண்ணிட்டே இருக்கணும்” என்று பேசுகிறார். அதன் பிறகு ரியோ ராஜ் “யாரு ப்ரோ யார் யாரா provoke பண்ணாங்க?” என்று பேசுகிறார். அதற்கு பாலாஜி முருகதாஸ் “உங்களுக்கு அப்படி தெரியுது” என்று பேசுகிறார். பின், அர்ச்சனா “you are responsible to answer me as the house captain for the next 4 days” என்று பேசுகிறார். அதற்கு பாலாஜி முருகதாஸ் “sorry i can’t” என்று பேசுகிறார். அதன் பிறகு garden ஏரியாவுக்கு சென்ற பாலாஜி முருகதாஸ் தனியாக அமர்ந்து அழுகிறார். இவ்வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.