‘சன் பிக்சர்ஸ்’ தயாரிப்பில் ‘விஜய் 65’… 3-வது முறையாக பிரபல இயக்குநருடன் கூட்டணியா?
October 30, 2020 / 09:05 PM IST
|Follow Us
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய். இவரது ரசிகர்கள் ‘தளபதி’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். விஜய்யின் கடைசி படமான ‘பிகில்’ கடந்த ஆண்டு வெளியாகி மாஸ் ஹிட்டானது. இவர் நடித்திருக்கும் புதிய படமான ‘மாஸ்டர்’ ரிலீஸுக்கு வெயிட்டிங் லிஸ்டில் உள்ளது.
இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளாராம். இதில் தளபதிக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். தளபதிக்கு எதிரியாக விஜய் சேதுபதி நடித்துள்ளாராம். ‘கொரோனா’ பிரச்சனையால் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளது. இப்பிரச்சனை முடிந்தவுடன் ரிலீஸ் தேதியை ஃபிக்ஸ் செய்து கொள்ளலாம் என காத்துக் கொண்டிருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.
விஜய்யின் அடுத்த படமான ‘தளபதி 65’யை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க, ‘சன் பிக்சர்ஸ்’ தயாரிக்க உள்ளது என கடந்த சில மாதங்களாக தகவல் வந்த வண்ணமிருந்தது. இப்படத்தின் பட்ஜெட் ரூ.130 கோடியாம். இதில் விஜய்க்கு ரூ.70 கோடியும், ஏ.ஆர்.முருகதாஸுக்கு ரூ.10 கோடியும் சம்பளம் பேசப்பட்டிருந்தது. இப்படத்தில் விஜய் ஹீரோ, வில்லன் என டபுள் ஆக்ஷனில் மாஸ் காட்டப்போகிறார் என்று சொல்லப்பட்டது. இதன் ஷூட்டிங்கை வருகிற ஜனவரி 20-ஆம் தேதி ஆரம்பிக்கவும், படத்தை 2021 தீபாவளிக்கு வெளியிடவும் ப்ளான் போடப்பட்டிருந்தது.
கடந்த வாரம், திடீரென இந்த படத்தில் இருந்து இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் விலகியுள்ளதாக தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து இப்படத்தினை விஜய்யை வைத்து ‘திருப்பாச்சி, சிவகாசி’ போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் பேரரசு இயக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கோலிவுட்டில் தண்டோரா போடப்படுகிறது. தற்போது, இது தொடர்பாக விஜய் தரப்பில் விசாரித்த போது “இந்த தகவல் உண்மையல்ல” என்று கூறியுள்ளனர்.