அப்பாவான அடுத்த நகைச்சுவை நடிகர் – சந்தோஷத்தில் வெளியிட்ட பதிவு!
November 4, 2020 / 10:23 PM IST
|Follow Us
தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக தற்போது திகழ்ந்து வருபவர் நடிகர் சதீஷ். சின்ன சின்ன வேடங்களில் நடித்து தற்போது பெரிய நடிகர்களின் நண்பராக நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் இவர்.
தமிழ் சினிமாவில் 2006 ஆம் ஆண்டு வெளியான ‘ஜெர்ரி’ என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமான இவர் தொடர்ந்து தமிழ் படம், மதராசபட்டினம், மாலை பொழுதின் மயக்கத்திலே போன்ற திரைப்படங்களில் நடித்து வந்த இவர் “எதிர்நீச்சல்” படத்தில் சிவகார்த்திகேயன் நண்பராக நடித்ததன் பின் புகழ் பெற்றார்.
அதிகமாக ஹீரோவின் நண்பராக நகைச்சுவைகளை செய்துவரும் இந்த நடிகர் தற்போது ஒரு பெண் குழந்தைக்கு தான் அப்பாவான சந்தோஷத்தை வெளியிட்டு அனைவரின் ஆசி வேண்டி பதிவிட்டுள்ளார்.
தற்போது இந்த நடிகர் பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தம் ஆகி செம பிஸியாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.