வெளியாகவுள்ள நடிகர் சிம்புவின் அடுத்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்!
November 20, 2020 / 04:19 PM IST
|Follow Us
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிலம்பரசன் நடித்துக் கடைசியாக வெளிவந்த திரைப்படம் “வந்தா ராஜாவா தான் வருவேன்”. சுந்தர்.சி இயக்கத்தில் இந்த படத்தில் நடித்திருந்த சிம்பு, அடுத்து வெங்கட்பிரபு இயக்கத்தில் “மாநாடு” என்ற படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியிருந்தார்.
இந்த வருடத்தின் தொடக்கத்தில் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்ட நிலையில், கொரோனா லாக்டவுன் காரணமாக தற்போது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்த படத்தைப் பற்றிய அப்டேட்டை சிம்புவின் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், தற்போது இந்த படத்தின் ஷூட்டிங் பாண்டிச்சேரியில் நடைபெற்று வருவதாக தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தில் எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஏ.சந்திரசேகர், பாரதிராஜா, பிரேம்ஜி அமரன், கருணாகரன் ஆகியோரும் நடித்துள்ளார்கள். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.
இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை காலை 10:44 மணிக்கு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக தகவலை நடிகர் சிலம்பரசன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.