சினிமாவில் 1997-ஆம் ஆண்டிலிருந்து 2001-ஆம் ஆண்டு வரை பிரபல ஹீரோயினாக வலம் வந்தவர் ஷாலினி. ஷாலினி ஹீரோயினாவதற்கு முன்பு, அவரது மூன்றாவது வயதிலேயே குழந்தை நட்சத்திரமாக ‘எண்டே மாமட்டுகுட்டியம்மாக்கு’ என்ற மலையாள திரைப்படத்தில் அறிமுகமானார். அதன் பிறகு பல மலையாளம் மொழி படங்கள் மட்டுமின்றி தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக வலம் வந்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார்.
ஷாலினி தமிழ் சினிமாவில் ஹீரோயினாக நடித்த முதல் படமே ‘தளபதி’ விஜய்யுடன் தான். அது தான் ‘காதலுக்கு மரியாதை’. இந்த படத்தை இயக்குநர் பாசில் இயக்கியிருந்தார். இப்படம் சூப்பர் ஹிட்டானதும் நடிகை ஷாலினிக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘அமர்க்களம், கண்ணுக்குள் நிலவு, அலைபாயுதே, பிரியாத வரம் வேண்டும்’ என தமிழ் படங்கள் குவிந்தது.
அதன் பிறகு 2000-ஆம் ஆண்டு முன்னணி நடிகர் ‘தல’ அஜித்தை காதலித்து திருமணம் செய்து கொண்டார் ஷாலினி. இவர்களுக்கு அனோஷ்கா என்ற மகளும், ஆத்விக் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில், இன்று (நவம்பர் 20-ஆம் தேதி) நடிகை ஷாலினியின் பிறந்த நாள் என்பதால் திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் இவருக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அன்று முதல் இன்று வரை இதுவரை யாரும் பார்த்திராத நடிகை ஷாலினியின் ஸ்பெஷல் ஸ்டில்ஸ் இதோ…
1

2

3

4

5

6

7

8

9

10

11

12

13

14

15

16

17

18

19

20

21

22

23

24

25

26

27

28

29

30

31

32

33

34

35

36

37

38

39

40

41

42

43

44

45

46

47

48

49

50

51

52

53

