பாண்டிராஜ் இயக்கத்தில் ‘சூர்யா 40’… ஹீரோயின் யார் தெரியுமா?
November 21, 2020 / 02:38 PM IST
|Follow Us
முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா நடித்து, தயாரித்துள்ள புதிய படம் ‘சூரரைப் போற்று’. ‘ஏர் டெக்கான்’ விமான நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையமாக வைத்து கதைக்களம் அமைக்கப்பட்டுள்ள இப்படத்தை பெண் இயக்குநர் சுதா கொங்கரா இயக்கியுள்ளார். இதில் சூர்யா ‘நெடுமாறன் ராஜாங்கம்’ என்ற கேரக்டரில் வலம் வந்துள்ளார்.
அவருக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளாராம். சமீபத்தில், இப்படம் OTT-யில் ரிலீஸானது. இந்த படத்தை ‘அமேசான் ப்ரைம்’ டிஜிட்டல் பிளாட்ஃபார்மில் பார்த்த ரசிகர்களும், பிரபலங்களும் பாராட்டி வருகிறார்கள். ‘சூரரைப் போற்று’ படத்துக்கு பிறகு சூர்யா, கெளதம் மேனன் இயக்கத்தில் ‘நவரசா’ வெப் சீரிஸில் நடித்து கொண்டிருக்கிறார்.
இதனை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கும் ‘வாடிவாசல்’ படத்தில் நடிக்க உள்ளார். தற்போது, நடிகர் சூர்யாவின் 40-வது படம் தொடர்பான சூப்பரான தகவல் கிடைத்துள்ளது. இந்த படத்தை பாப்புலர் இயக்குநர் பாண்டிராஜ் இயக்க, ‘சன் பிக்சர்ஸ்’ தயாரிக்க உள்ளது. இதில் சூர்யாவுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க உள்ளாராம். இப்படத்துக்கான ப்ரீ-புரொடக்ஷன் வேலைகள் ஜெட் ஸ்பீடில் நடந்து வருகிறதாம். இதன் ஷூட்டிங்கை வருகிற டிசம்பர் மாதம் ஆரம்பிக்க ப்ளான் போட்டுள்ளனர் படக்குழுவினர்.
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.