“எனக்கு ‘பிக் பாஸ்’ வீட்ல அன்பு அவசியம் இல்ல சார்”… கமலிடம் சொன்ன பாலாஜி!
November 28, 2020 / 09:27 PM IST
|Follow Us
விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 4 கடந்த அக்டோபர் 4-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகத் துவங்கி உள்ளது. தொடர்ந்து 105 நாட்கள் நடைபெறவிருக்கும் இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரியோ ராஜ், நடிகை சனம் ஷெட்டி, நடிகை ரேகா, மாடல் பாலாஜி முருகதாஸ், செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத், நடிகை ஷிவானி நாராயணன், நடிகர் ஜித்தன் ரமேஷ், பாடகர் வேல்முருகன், நடிகர் ஆரி, மாடல் சோமசேகர், நடிகை கேப்ரில்லா, விஜய் டிவி அறந்தாங்கி நிஷா, நடிகை ரம்யா பாண்டியன், நடிகை சம்யுக்தா கார்த்திக், நடிகர் சுரேஷ் சக்கரவர்த்தி, ‘சூப்பர் சிங்கர்’ ஆஜித் ஆகிய 16 பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
கடந்த அக்டோபர் 15-ஆம் தேதி பிக் பாஸ் வீட்டிற்குள் வைல்ட் கார்ட் மூலம் ‘விஜய் டிவி’ மற்றும் ‘ஜீ தமிழ்’ மூலம் ஃபேமஸான தொகுப்பாளினி அர்ச்சனா என்ட்ரியானார். அதன் பிறகு ரேகா மற்றும் வேல்முருகன் எலிமினேட் செய்யப்பட்டனர். பின், வீட்டிற்குள் வைல்ட் கார்ட் மூலம் பிரபல ஆர்ஜேவும், பாடகியுமான சுசித்ரா என்ட்ரியானார். அதன் பிறகு சுரேஷ் சக்கரவர்த்தி எலிமினேட் செய்யப்பட்டார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை பிக் பாஸ் நிகழ்ச்சியில் சுசித்ரா எலிமினேட் செய்யப்பட்டார். தற்போது, விஜய் டிவி தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் புதிய ப்ரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளது. இந்த ப்ரோமோ வீடியோவில் கமலிடம் அர்ச்சனா “எப்ப பாரு ஒருத்தரை முன்னிலைபடுத்தி விளையாடனும் அப்படின்னா அது பிக் பாஸ்ல முடியவே முடியாது சார். மூணு பேர் மூணு பேர் குரூப்பிஸம்ன்னு சொல்லிட்டு இருக்காரு. என்னாதான்பா கதை கொஞ்சம் சொல்லேன்பா அப்படிங்குறதுக்காக தான்” என்று சொல்லிக் கொண்டிருக்கையில் கமல் “அன்பு ஜெயிக்கும்னு நம்புறீங்களா நீங்க?” என்று கேட்கிறார். அதற்கு அர்ச்சனா “நான் நம்புறேன் சார்” என்று சொல்கிறார்.
பின், பாலாஜி “அன்பு அவசியம் தான். எனக்கு அவசியம் இல்ல இந்த வீட்ல” என்று சொல்கிறார். அதன் பிறகு ரியோ ராஜ் “ஒவ்வொரு தடவையும் worst performer-அ நாமினேட் பண்ணும்போது, நான் ஒன்னு சொல்றேன் அப்படின்னு எழுந்திருச்சு சொல்றார்ல சார். அப்போ அவருக்கு தோணுச்சுனா அவர் அங்கயே சொல்லியிருந்திருக்கலாம் சார்” என்று சொல்கிறார். பின், அர்ச்சனா “திரும்பத் திரும்ப நீ நீன்னா முடியல சார். உடம்பு வலிக்குது சார்” என்று சொல்கிறார். அதற்கு பாலாஜி “இந்த அன்பை வந்து கேமுக்குள்ள கொண்டு வந்தாங்கன்னா எல்லாரும் பாதிக்கப்படுவாங்க, நானும் பாதிக்கப்படுவேன்” என்று சொல்கிறார். இவ்வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.