‘பிக் பாஸ் 4’ : “எப்படி நான் நாமினேட் ஆகல?”… கன்ஃப்யூஸ் ஆன ரியோ!
November 30, 2020 / 07:10 PM IST
|Follow Us
விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 4 கடந்த அக்டோபர் 4-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகத் துவங்கி உள்ளது. தொடர்ந்து 105 நாட்கள் நடைபெறவிருக்கும் இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரியோ ராஜ், நடிகை சனம் ஷெட்டி, நடிகை ரேகா, மாடல் பாலாஜி முருகதாஸ், செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத், நடிகை ஷிவானி நாராயணன், நடிகர் ஜித்தன் ரமேஷ், பாடகர் வேல்முருகன், நடிகர் ஆரி, மாடல் சோமசேகர், நடிகை கேப்ரில்லா, விஜய் டிவி அறந்தாங்கி நிஷா, நடிகை ரம்யா பாண்டியன், நடிகை சம்யுக்தா கார்த்திக், நடிகர் சுரேஷ் சக்கரவர்த்தி, ‘சூப்பர் சிங்கர்’ ஆஜித் ஆகிய 16 பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
கடந்த அக்டோபர் 15-ஆம் தேதி பிக் பாஸ் வீட்டிற்குள் வைல்ட் கார்ட் மூலம் ‘விஜய் டிவி’ மற்றும் ‘ஜீ தமிழ்’ மூலம் ஃபேமஸான தொகுப்பாளினி அர்ச்சனா என்ட்ரியானார். அதன் பிறகு ரேகா மற்றும் வேல்முருகன் எலிமினேட் செய்யப்பட்டனர். பின், வீட்டிற்குள் வைல்ட் கார்ட் மூலம் பிரபல ஆர்ஜேவும், பாடகியுமான சுசித்ரா என்ட்ரியானார். அதன் பிறகு சுரேஷ் சக்கரவர்த்தி மற்றும் சுசித்ரா எலிமினேட் செய்யப்பட்டனர்.
நேற்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் சம்யுக்தா கார்த்திக் எலிமினேட் செய்யப்பட்டார். தற்போது, விஜய் டிவி தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் புதிய ப்ரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளது. இந்த ப்ரோமோ வீடியோவில் ரியோ ராஜ், சோமசேகர், கேப்ரில்லா, ஜித்தன் ரமேஷ் நான்கு பேரும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது, ரியோ “எப்படி நான் நாமினேட் ஆகல” என்று சொல்கிறார்.
பின், சோமசேகர் “சந்தோஷமா வரேன் இன்னைக்கு நாமினேட் ஆகலைன்னு, நான் உனக்கு போட்டனே” என்று கேப்ரில்லா சொன்னதாக சொல்கிறார். அதன் பிறகு சோமசேகர் ரியோவிடம் “ஒரு வாரம் ஹேப்பியா இருந்தேன். ஒரு வாரம் சோகமா இருந்தேன்னு சொல்ல வர்றியா நீ” என்று கேட்கிறார். பின், கேப்ரில்லா “அடுத்த வாரம் நீ கவலைப்படாத” என்று ரியோவிடம் சொல்கிறார். அதற்கு ரியோ ஏதோ சொல்ல, சோமசேகரும் – கேப்ரில்லாவும் அவரை கலாய்த்து சிரிக்கிறார்கள். இவ்வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.