‘பிக் பாஸ் 4’ : “எனக்கு position-ஏ இல்ல நான் ஏன் நிற்கணும்?”ன்னு சொன்ன அனிதா… கடுப்பான ஹவுஸ்மேட்ஸ்!
December 3, 2020 / 07:47 PM IST
|Follow Us
விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 4 கடந்த அக்டோபர் 4-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகத் துவங்கி உள்ளது. தொடர்ந்து 105 நாட்கள் நடைபெறவிருக்கும் இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரியோ ராஜ், நடிகை சனம் ஷெட்டி, நடிகை ரேகா, மாடல் பாலாஜி முருகதாஸ், செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத், நடிகை ஷிவானி நாராயணன், நடிகர் ஜித்தன் ரமேஷ், பாடகர் வேல்முருகன், நடிகர் ஆரி, மாடல் சோமசேகர், நடிகை கேப்ரில்லா, விஜய் டிவி அறந்தாங்கி நிஷா, நடிகை ரம்யா பாண்டியன், நடிகை சம்யுக்தா கார்த்திக், நடிகர் சுரேஷ் சக்கரவர்த்தி, ‘சூப்பர் சிங்கர்’ ஆஜித் ஆகிய 16 பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
கடந்த அக்டோபர் 15-ஆம் தேதி பிக் பாஸ் வீட்டிற்குள் வைல்ட் கார்ட் மூலம் ‘விஜய் டிவி’ மற்றும் ‘ஜீ தமிழ்’ மூலம் ஃபேமஸான தொகுப்பாளினி அர்ச்சனா என்ட்ரியானார். அதன் பிறகு ரேகா மற்றும் வேல்முருகன் எலிமினேட் செய்யப்பட்டனர். பின், வீட்டிற்குள் வைல்ட் கார்ட் மூலம் பிரபல ஆர்ஜேவும், பாடகியுமான சுசித்ரா என்ட்ரியானார். அதன் பிறகு சுரேஷ் சக்கரவர்த்தி மற்றும் சுசித்ரா எலிமினேட் செய்யப்பட்டனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை பிக் பாஸ் நிகழ்ச்சியில் சம்யுக்தா கார்த்திக் எலிமினேட் செய்யப்பட்டார். தற்போது, விஜய் டிவி தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் புதிய ப்ரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளது. இந்த ப்ரோமோ வீடியோவில் மற்ற ஹவுஸ்மேட்ஸிடம் ஆரி “இப்போ அனிதா நம்பர் 2-யில் நிற்க எத்தனை பேர் vote பண்றீங்க?” என்று கேட்கிறார். அதற்கு ஜித்தன் ரமேஷ் “ப்ரோ நான் அவங்கள நம்பர் 2-விற்கு accept-ஏ பண்ண மாட்டேன் ப்ரோ” என்று சொல்கிறார். பின், கேப்ரில்லா “இது unfair for அனிதான்னு நான் சொல்லுவேன்” என்று சொல்கிறார்.
அதன் பிறகு அனிதா “நான் நிக்கலப்பா” என்று சொல்கிறார். அனைவரும் காரணம் கேட்டவுடன் அனிதா “ஏய் நான் வரலடா போய் நில்லுங்க. அந்த நம்பருக்கு நான் நின்னா மட்டும் உங்களுக்கு அஞ்சு வாட்டி பத்து வாட்டி திரும்ப திரும்ப எடுப்பீங்க மாறுதா மாறுதான்னு மாறுற வரைக்கும் எடுத்துட்டே இருப்பீங்க. எடுங்க. விட்டிருங்க நான் candidate-ஏ இல்ல” என்று சொல்கிறார். பின், அர்ச்சனா “எங்க நிக்குற அனிதா? நீ முடிவெடுத்தே ஆகணும்” என்று சொல்கிறார். அதற்கு அனிதா “எனக்கு position-ஏ இல்ல.நான் ஏன் நிற்கணும்?” என்று சொல்லி கோபமாக அங்கிருந்து நடந்து செல்கிறார். இவ்வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.