புயல் வேகத்தில் நடந்து முடிந்த நயன்தாராவின் “நிழல்” திரைப்பட ஷூட்டிங்!
December 4, 2020 / 11:29 PM IST
|Follow Us
தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்தை வென்ற நடிகை நயன்தாரா சரத்குமார் நடிப்பில் வெளியான ‘அய்யா’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி, பின் சூப்பர் ஸ்டாருடன் ‘சந்திரமுகி’ திரைப்படத்தில் நடித்து பிரபலமானவர்.
ஒவ்வொரு படியிலும் மிகவும் கஷ்டப்பட்டு தற்போது லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை பெற்றுள்ள இவரது சொந்த வாழ்க்கையில் பல பிரச்சனைகள் இருந்தும் அந்த சவால்களை தாண்டி தற்போது வெற்றி நடிகையாக வலம் வருகிறார்.
தற்போது ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படம் கடந்த தீபாவளியன்று ஹாட்ஸ்டாரில் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாக தற்போது ரசிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் 12 வருடங்களுக்கு பிறகு மீண்டும் பிரபல மலையாள நடிகர் குஞ்சகோ போபன் உடன் இணைந்து “நிழல்” என்ற திரைப்படத்தில் நடிப்பதாக சமீபத்தில் தகவல் வெளியானது.
தற்போது ஒரு மாத காலத்தில் இந்த திரைப்படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துள்ளதாகவும் விரைவில் இந்த படம் குறித்த அடுத்த அப்டேட் வெளியாகும் என்று கூறி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்கள் திரைப்பட குழு.
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.