‘பிக் பாஸ் 4’ : “உட்கார வச்சு எவ்ளோ நேரம் பேசுவீங்க?”… ஆரி – நிஷா இடையே மோதல்!
December 8, 2020 / 07:09 PM IST
|Follow Us
விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 4 கடந்த அக்டோபர் 4-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகத் துவங்கி உள்ளது. தொடர்ந்து 105 நாட்கள் நடைபெறவிருக்கும் இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரியோ ராஜ், நடிகை சனம் ஷெட்டி, நடிகை ரேகா, மாடல் பாலாஜி முருகதாஸ், செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத், நடிகை ஷிவானி நாராயணன், நடிகர் ஜித்தன் ரமேஷ், பாடகர் வேல்முருகன், நடிகர் ஆரி, மாடல் சோமசேகர், நடிகை கேப்ரில்லா, விஜய் டிவி அறந்தாங்கி நிஷா, நடிகை ரம்யா பாண்டியன், நடிகை சம்யுக்தா கார்த்திக், நடிகர் சுரேஷ் சக்கரவர்த்தி, ‘சூப்பர் சிங்கர்’ ஆஜித் ஆகிய 16 பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
கடந்த அக்டோபர் 15-ஆம் தேதி பிக் பாஸ் வீட்டிற்குள் வைல்ட் கார்ட் மூலம் ‘விஜய் டிவி’ மற்றும் ‘ஜீ தமிழ்’ மூலம் ஃபேமஸான தொகுப்பாளினி அர்ச்சனா என்ட்ரியானார். அதன் பிறகு ரேகா மற்றும் வேல்முருகன் எலிமினேட் செய்யப்பட்டனர். பின், வீட்டிற்குள் வைல்ட் கார்ட் மூலம் பிரபல ஆர்ஜேவும், பாடகியுமான சுசித்ரா என்ட்ரியானார். அதன் பிறகு சுரேஷ் சக்கரவர்த்தி, சுசித்ரா மற்றும் சம்யுக்தா கார்த்திக் எலிமினேட் செய்யப்பட்டனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை பிக் பாஸ் நிகழ்ச்சியில் சனம் ஷெட்டி எலிமினேட் செய்யப்பட்டார். தற்போது, விஜய் டிவி தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் புதிய ப்ரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளது. இந்த ப்ரோமோ வீடியோவில் ஆரி, அறந்தாங்கி நிஷா, ஜித்தன் ரமேஷ் மூவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது நிஷா “டாஸ்க் தான இது. ஒரு ரோபோவை எவ்ளோ நேரம் செய்வீங்க” என்று சொல்கிறார். பின், ஆரி “சரி என்ன பேசணும்?” என்று கேட்கிறார்.
அதற்கு நிஷா “என்ன பேசணும்னு தெரிஞ்சு தான் பேசணும். ராஜா வீட்டு கண்ணுக்குட்டின்னு பேர் வச்சது நீங்கதான” என்று சொல்கிறார். பின், ஆரி “ஆமா” என்று சொல்கிறார். அதற்கு நிஷா “எதுக்கு வச்சீங்க?” என்று கேட்கிறார். பின், ஆரி “அவர் வீட்ல எந்த வேலையுமே சரியா செய்யுறது இல்ல” என்று சொல்கிறார். அதற்கு நிஷா “எந்த வேலையும் செய்யலன்னு உங்களுக்கு தெரியுமா? நீங்க பார்த்தீங்களா? எல்லாரோட வேலையும் பார்க்குறது தான் உங்க வேலையா?” என்று கேட்கிறார்.
பின், ஆரி “ஆமா என் வேலை அதான” என்று சொல்கிறார். அதற்கு நிஷா “என்ன வேலை?” என்று கேட்கிறார். பின், ஆரி “என் வேலை பிக் பாஸ் வீட்ல அதான. எல்லாரும் யார் யார் சரியா இருக்காங்க” என்று சொல்கிறார். அதற்கு நிஷா “அதுக்கு பிக் பாஸ் இருக்காரு. கேமரா இருக்கு. கூட்டிட்டு வந்து உட்கார வச்சு எவ்ளோ நேரம் பேசுவீங்க?” என்று கேட்கிறார். பின், ஆரி ரமேஷிடம் “நான் உங்ககிட்ட தான பேசிட்டு இருக்கேன். இப்போ உங்கள பத்தி கேட்டா இவங்களுக்கு ஏன் கோபம் வருது? ஏன் நீங்க பேசாதீங்கன்னு சொல்லுங்களேன் இப்போ” என்று கோபமாக பேசுகிறார். இவ்வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.