ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிக்கும் படத்தில் விஷால்… இயக்குநர் யார் தெரியுமா?
December 24, 2020 / 06:50 PM IST
|Follow Us
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் விஷால். பிரபல தயாரிப்பாளரின் மகனாக இருக்கும் விஷால், திரையுலகில் தனக்கென ஒரு ஃபார்முலாவை பிடித்து ஹிட் படங்களில் நடித்து வருகிறார். விஷாலுக்கு முதல் படம் ‘செல்லமே’. இரண்டாவது படமான ‘சண்டக்கோழி’-யில் சண்டைக் காட்சிகளில் மாஸ் காட்டியிருந்தார் விஷால். லிங்குசாமி இயக்கிய ‘சண்டக்கோழி’ மெகா ஹிட்டானதும், நடிகர் விஷாலுக்கு அடித்தது ஜாக்பாட்.
அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘திமிரு, தாமிரபரணி, மலைக்கோட்டை, சத்யம், தோரணை, தீராத விளையாட்டுப் பிள்ளை, பாண்டிய நாடு, நான் சிகப்பு மனிதன், பூஜை, கதகளி, துப்பறிவாளன், இரும்புத் திரை, அயோக்யா’ என படங்கள் குவிந்தது. விஷாலின் படங்கள் அனைத்தும் தெலுங்கு மொழியிலும் ரிலீஸாவதால், ஆந்திரா மற்றும் தெலுங்கானா ரசிகர்களிடமும் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார்.
இப்போது, நடிகர் விஷால் நடிப்பில் ‘சக்ரா, துப்பறிவாளன் 2’ மற்றும் ‘எனிமி’ என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. தற்போது, விஷால் தனது கால்ஷீட் டைரியில் இணைய ஒரு புதிய படத்துக்கு ஓகே சொல்லியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த படத்தை ‘சோனி பிக்சர்ஸ்’ நிறுவனத்துடன் இணைந்து இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிக்க, ‘மான் கராத்தே’ படம் மூலம் ஃபேமஸான இயக்குநர் திருக்குமரன் இயக்க உள்ளாராம்.
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.