2 மொழிகளில் தயாராகப்போகும் சூர்யா படம்… பிரபல தெலுங்கு இயக்குநருடன் கூட்டணி!
January 23, 2021 / 11:31 AM IST
|Follow Us
முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா நடித்து, தயாரித்த புதிய படமான ‘சூரரைப் போற்று’ சமீபத்தில் OTT-யில் ரிலீஸானது. ‘ஏர் டெக்கான்’ விமான நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையமாக வைத்து கதைக்களம் அமைக்கப்பட்டுள்ள இப்படத்தை பெண் இயக்குநர் சுதா கொங்கரா இயக்கியுள்ளார். இதில் சூர்யா ‘நெடுமாறன் ராஜாங்கம்’ என்ற கேரக்டரில் வலம் வந்துள்ளார். அவருக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளாராம்.
இந்த படத்தை ‘அமேசான் ப்ரைம்’ டிஜிட்டல் பிளாட்ஃபார்மில் பார்த்த ரசிகர்களும், பிரபலங்களும் பாராட்டி வருகிறார்கள். ‘சூரரைப் போற்று’ படத்துக்கு பிறகு சூர்யா, கெளதம் மேனன் இயக்கத்தில் ‘நவரசா’ வெப் சீரிஸில் நடித்து கொண்டிருக்கிறார். இதனை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கும் ‘வாடிவாசல்’, இயக்குநர் சிவா – பாண்டிராஜ் இயக்கும் படங்கள் என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.
இந்நிலையில், சூர்யா தனது கால்ஷீட் டைரியில் இணைய ஒரு புதிய படத்துக்கு ஓகே சொல்லியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இப்படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாக உள்ளதாம். இந்த படத்தை டோலிவுட்டில் பாப்புலர் இயக்குநரான போயபட்டி ஸ்ரீனு இயக்க உள்ளாராம். இதனை தில் ராஜு தனது ‘ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ்’ நிறுவனம் மூலம் தயாரிக்க உள்ளாராம்.