தவறான ஃபேஷியல் விவகாரம்… ரைசாவிடம் ரூ.5 கோடி நஷ்ட ஈடு கேட்ட டாக்டர் பைரவி!
April 28, 2021 / 07:56 PM IST
|Follow Us
‘பிக் பாஸ்’ மூலம் ஃபேமஸான நடிகை ரைசா வில்சன். அதன் பிறகு ‘பியார் பிரேமா காதல், வர்மா’ ஆகிய தமிழ் படங்களில் நடித்திருந்தார். இப்போது, ரைசா வில்சன் நடிப்பில் ‘#லவ், FIR, காதலிக்க யாருமில்லை, ஆலிஸ், தி சேஸ்’ என ஐந்து படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. சமீபத்தில், ரைசா தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “டாக்டர் பைரவி செந்திலிடம் சென்று என் முகத்தில் ஃபேஷியல் செய்து கொண்டேன்.
அப்போது அவர் இதுவரை செய்யாத ஒரு முறையில் ஃபேஷியல் செய்து கொள்ளும் படி என்னை கட்டாயப்படுத்தினார். அதன் விளைவு என்னுடைய முகத்தை இப்படி ஆக்கி விட்டது. அதன் பிறகு டாக்டர் பைரவி என்னை சந்தித்து பேச மறுக்கிறார். அவருடன் பணிபுரிபவர்கள், அவர் ஊரிலேயே இல்லை வெளியூர் சென்று விட்டார்” என்று சொல்கிறார்கள் என்று குறிப்பிட்டு, ஒரு ஸ்டில்லையும் வெளியிட்டிருந்தார்.
அந்த ஸ்டில்லில் ரைசாவின் கண்ணுக்கு கீழ் வீங்கியிருந்தது. பின், இதற்காக டாக்டர் பைரவி செந்திலிடம் ரூ.1 கோடி நஷ்ட ஈடு கேட்டு நடிகை ரைசா வில்சன் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருந்தார். இதனைத் தொடர்ந்து டாக்டர் பைரவி செந்தில் ரைசாவுக்கு அனுப்பியிருந்த பதில் நோட்டீஸில் “இன்னும் மூன்றே நாட்களில் ரைசா வில்சன் என்னிடம் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் அவர் மீது மானநஷ்ட வழக்கு தொடரப்படும்” என்று கூறியிருந்தார். தற்போது, ரைசா மன்னிப்பு கேட்காததால் அவரிடம் ரூ.5 கோடி நஷ்ட ஈடு கேட்டு டாக்டர் பைரவி செந்தில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.