ஃபேஸ்புக்கில் மதம் சம்பந்தப்பட்ட பதிவு… கொந்தளித்த நெட்டிசன்களுக்கு பதிலடி கொடுத்த யுவன் ஷங்கர் ராஜா!
April 29, 2021 / 04:14 PM IST
|Follow Us
சினிமாவில் டாப் இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வருபவர் யுவன் ஷங்கர் ராஜா. இவர் இசையமைப்பாளராக அறிமுகமான முதல் படத்தின் பாடல்களே சூப்பர் ஹிட்டானது. அது தான் ‘அரவிந்தன்’. அதன் பிறகு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவுக்கு அடித்தது ஜாக்பாட்.
அடுத்தடுத்து பல முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கு இசையமைத்து ரசிகர்களிடம் லைக்ஸ் குவித்தார். யுவன் ஷங்கர் ராஜா தமிழ் மொழி படங்கள் மட்டுமில்லாமல் தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழி படங்களுக்கும் இசையமைத்திருக்கிறார். கடைசியாக இவர் இசையமைத்து திரையரங்குகளில் ரிலீஸான படம் ‘நெஞ்சம் மறப்பதில்லை’.
இப்போது தமிழில் சந்தானத்தின் ‘டிக்கிலோனா’, ‘பிக் பாஸ் 4’ ரியோ ராஜின் ‘பிளான் பண்ணி பண்ணனும்’, ‘தல’ அஜித்தின் ‘வலிமை’, சிலம்பரசனின் ‘மாநாடு’, தனுஷின் ‘நானே வருவேன்’, அதர்வாவின் ‘குருதி ஆட்டம்’, ஹரிஷ் கல்யாணின் ‘ஸ்டார்’ ஆகிய படங்களுக்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து கொண்டிருக்கிறார்.
இந்நிலையில், இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா நேற்று தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் குரான் பதிவு ஒன்றை ஸ்டேட்டஸாக போட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து “என்ன யுவன் மதப் பிரச்சாரம் செய்றீங்க?” என்று பலர் கமென்ட்ஸ் போட்ட வண்ணமிருந்தனர். சிலரின் கமென்ட்டுகளுக்கு யுவன் ஷங்கர் ராஜா பதில் கூறியுள்ளார்.
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.