‘கொரோனா’ இரண்டாவது அலை… ‘விஜய் 65’ படத்துக்கு வந்த புதிய சிக்கல்!
May 6, 2021 / 07:35 PM IST
|Follow Us
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய். இவரது ரசிகர்கள் ‘தளபதி’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். விஜய்யின் கடைசி படமான ‘மாஸ்டர்’ கடந்த ஜனவரி 13-ஆம் தேதி பொங்கல் ஸ்பெஷலாக தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடத்திலும், கடந்த ஜனவரி 14-ஆம் தேதி ஹிந்தியிலும் (விஜய் தி மாஸ்டர்) ரிலீஸானது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார்.
இதில் தளபதிக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்திருந்தார். தளபதிக்கு எதிரியாக விஜய் சேதுபதி நடித்திருந்தார். விஜய்யின் அடுத்த படமான ‘தளபதி 65’யை நெல்சன் இயக்க, ‘சன் பிக்சர்ஸ்’ தயாரித்து வருகிறது. இந்த படத்துக்கு ‘ராக்ஸ்டார்’ அனிருத் இசையமைத்து வருகிறார், மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்து வருகிறார். இந்த படத்தில் விஜய்-க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். மேலும், மிக முக்கிய ரோலில் பாப்புலர் மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ நடிக்கிறார்.
சமீபத்தில், இந்த படத்தின் முதல் ஷெடியூல் ஷூட்டிங் ஜார்ஜியாவில் முடிவடைந்தது. புதிய ஷெடியூல் ஷூட்டிங்கை இம்மாதமே சென்னையில் ஆரம்பிக்க ப்ளான் போட்டிருந்தனர். இதற்காக சென்னையில் பிரம்மாண்டமான ஷாப்பிங் மால் செட் ஒன்றும் போடப்பட்டு வந்தது. தற்போது, கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக இருப்பதால் புதிய ஷெடியூல் ஷூட்டிங்கை ஜூன் மாதத்தில் இருந்து சென்னையில் ஆரம்பித்து கொள்ளலாம் என்று படக்குழு முடிவெடுத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.