கே.பாக்யராஜ் மற்றும் பூர்ணிமாவுக்கு ‘கொரோனா’ பாதிப்பு… ஷாந்தனு ட்வீட்!
May 7, 2021 / 05:43 PM IST
|Follow Us
தமிழ் சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் ஷாந்தனு. பாப்புலர் இயக்குநர் கே.பாக்யராஜின் மகனான ஷாந்தனு குழந்தை நட்சத்திரமாக ‘வேட்டிய மடிச்சுக்கட்டு’ படத்தில் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார். அதன் பிறகு ஹீரோ அவதாரம் எடுத்தார் ஷாந்தனு.
‘சக்கரகட்டி, சித்து +2, கண்டேன், ஆயிரம் விளக்கு, அம்மாவின் கைப்பேசி, வாய்மை, கோடிட்ட இடங்களை நிரப்புக, முப்பரிமாணம், வானம் கொட்டட்டும், பாவக் கதைகள்’ என தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். தற்போது, ஷாந்தனு தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் “எனது அப்பாவுக்கும் (இயக்குநரும், நடிகருமான கே.பாக்யராஜ்), அம்மாவுக்கும் (நடிகை பூர்ணிமா) கொரோனா டெஸ்ட் எடுத்தபோது அவர்களுக்கு ‘கொரோனா’ தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர்கள் வீட்டிலையே தனிமைப் படுத்திக் கொண்டு, உரிய சிகிச்சை எடுத்துக் கொண்டு வருகிறார்கள். யாரெல்லாம் கடந்த சில நாட்களாக எங்களுடன் தொடர்பில் இருந்தீர்களோ, நீங்களும் டெஸ்ட் எடுத்துக் கொள்ளுங்கள்” என்று கூறியுள்ளார்.
My parents #KBhagyaraj#PoornimaBhagyaraj tested POSITIVE fr #Covid19 today.
All of us incl. staff hve quarantined ourselves @ home as per our doctors instructions
Requesting everyone who were in contact with any of us last 10days to get tested
Pls pray fr their speedy recovery🙏🏻
— Shanthnu 🌟 ஷாந்தனு Buddy (@imKBRshanthnu) May 7, 2021