‘கொரோனா’ இரண்டாவது அலை… தடுப்பு பணிகளுக்காக நிதியுதவி வழங்கிய சௌந்தர்யா ரஜினிகாந்த்!
May 14, 2021 / 01:24 PM IST
|Follow Us
தமிழ் சினிமாவில் பாப்புலர் பெண் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் சௌந்தர்யா. இவர் டாப் ஹீரோவான ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. சௌந்தர்யா இயக்கிய முதல் படமே அனிமேஷன் படம் தான். அந்த அனிமேஷன் படத்திலும் ஹீரோவாக நடித்திருந்தது அவரது அப்பா ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் தான். அது தான் 2014-ஆம் ஆண்டு வெளியான ‘கோச்சடையான்’.
‘கோச்சடையான்’ படத்துக்கு பிறகு ‘வேலையில்லா பட்டதாரி 2’ படத்தை இயக்கினார் சௌந்தர்யா ரஜினிகாந்த். இந்த படத்தில் ஹீரோவாக தனுஷ் நடித்திருந்தார். இது தவிர ‘கோவா’ என்ற படத்தை தயாரித்திருக்கிறார் சௌந்தர்யா. இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான வெங்கட் பிரபு இயக்கியிருந்தார். கடந்த மே 11-ஆம் தேதி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது ட்விட்டர் பக்கத்தில் “#COVIDSecondWave-க்கு எதிரான போரில் நாம் அனைவரும் சேர்ந்து போரிட வேண்டிய நேரம் இது.
முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்கிடுவீர்! பேரிடர் காலத்தில் பெறப்படும் நிதி கொரோனா தடுப்புக்கு மட்டுமே பயன்படுத்தப்படும். நன்கொடை – செலவினங்கள் பொதுவெளியில் வெளியிடப்படும்” என்று கூறியிருந்தார். தற்போது, சௌந்தர்யா ரஜினிகாந்த், அவரது கணவர் மற்றும் மாமனார் இணைந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று (மே 14-ஆம் தேதி) நேரில் சந்தித்து பேசியுள்ளனர். அப்போது, இவர்கள் கொரோனா தடுப்பு பணிகளுக்காக ரூ.1 கோடி நிதியுதவி வழங்கி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
My father-in-law Mr. S.S.Vanangamudi, husband Vishagan, his sister and I visited the honorable Chief minister @mkstalin sir this morning to hand over our contribution of 1cr for the chief ministers #CoronaReliefFund from our pharma company Apex laboratories, Makers of #Zincovitpic.twitter.com/jXDEIXaM3V
— soundarya rajnikanth (@soundaryaarajni) May 14, 2021