சிவகார்த்திகேயனின் ‘ரஜினி முருகன்’ பட நடிகர் பவுன்ராஜ் காலமானார்!
May 15, 2021 / 08:16 PM IST
|Follow Us
சமீப காலமாக தொடர்ச்சியான மரணங்கள் ரசிகர்களுக்கும், திரையுலகினருக்கும் அதிர்ச்சியைத் தருகிறது. பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், பிரபல காமெடி நடிகர்கள் விவேக் – பாண்டு – நெல்லை சிவா – மாறன், பிரபல இயக்குநர்கள் எஸ்.பி.ஜனநாதன் – தாமிரா, பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான கே.வி.ஆனந்த் என ரசிகர்களுக்கும், திரையுலக பிரபலங்களுக்குமே பிடித்தமான நபர்களின் இழப்பு அதிர்ச்சியளிக்கிறது.
இந்த சூழலில் இன்னொரு மரணச் செய்தி வந்திருக்கிறது. டாப் ஹீரோக்களில் ஒருவரான சிவகார்த்திகேயனின் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீமராஜா’ ஆகிய படங்களில் மிக முக்கிய ரோலில் நடித்தவர் பிரபல நடிகர் பவுன்ராஜ். பவுன்ராஜ் நடித்ததுடன், இம்மூன்று படங்களிலும் இயக்குநர் பொன்ராமிடம் இணை இயக்குநராகவும் பணியாற்றியிருக்கிறார்.
தற்போது, நடிகர் பவுன்ராஜுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இயற்கை எய்தினார் என தகவல் கிடைத்துள்ளது. இது தொடர்பாக இயக்குநர் பொன்ராம் ட்விட்டரில் “#RIPPawnraj ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன்’ போன்ற படங்களில் நடித்தவரும், எனது கோ டைரக்டருமான பவுன்ராஜ் ஹார்ட் அட்டாக்கில் இறந்து விட்டார். அவருக்கு ஆழ்ந்த இரக்கங்கள்” என்று கூறியுள்ளார்.
#RIPPawnraj வருத்தப்படாத வாலிபர் சங்கம் ரஜினிமுருகன், போன்ற படங்களில் நடித்தவரும் எனது கோ டைரக்டருமான பவுன்ராஜ் ஹார்ட் அட்டாக்கில் இறந்து விட்டார் அவருக்கு ஆழ்ந்த இரக்கங்கள் pic.twitter.com/uxOdKTHp2z
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.