ரசிகர்களிடம் வித்தியாசமான பிறந்த நாள் பரிசு கேட்ட நடிகர் கார்த்தி!
May 25, 2021 / 10:51 AM IST
|Follow Us
பிரபல நடிகர் சிவக்குமாரின் மகனாகவும், நடிகர் சூர்யாவின் தம்பியாகவும் இருந்தும் திரையுலகில் தனக்கென ஒரு ஃபார்முலாவை பிடித்து ஹிட் படங்களில் நடித்து வருகிறார் கார்த்தி. அறிமுகமான முதல் படமே மிகப் பெரிய வெற்றி பெறுவது என்பது எல்லோருக்கும் அமைந்து விடாது. ஆனால், கார்த்திக்கு அமைந்தது. அது தான் ‘பருத்திவீரன்’ படம். இந்த படத்தை இயக்குநர் அமீர் இயக்கியிருந்தார்.
‘பருத்திவீரன்’ ஹிட்டிற்கு பிறகு கார்த்திக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து அவரின் கால்ஷீட் டைரியில் ‘ஆயிரத்தில் ஒருவன், பையா, நான் மகான் அல்ல, சிறுத்தை, மெட்ராஸ், கொம்பன், தீரன் அதிகாரம் ஒன்று, கைதி’ என படங்கள் குவிந்தது. ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கேரக்டரில் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார் கார்த்தி.
2011-ஆம் ஆண்டு ரஞ்சனி என்பவரை திருமணம் செய்து கொண்டார் கார்த்தி. இவர்களுக்கு உமையாள் என்ற மகளும், கந்தன் என்ற மகனும் உள்ளனர். இப்போது, கார்த்தி நடிப்பில் ‘பொன்னியின் செல்வன்’ மற்றும் ‘சர்தார்’ என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், இன்று (மே 25-ஆம் தேதி) நடிகர் கார்த்தியின் பிறந்த நாள் என்பதால் திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் இவருக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தற்போது, கார்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் “அன்புத் தம்பிகள் அனைவருக்கும் வணக்கம்! இந்த கொரோனா சூழல் இதுவரை நாம் கண்டிராத அளவுக்கு மிகக் கடுமையாக உள்ளது! அரசாங்கமும், மருத்துவர்களும் நமக்கு அறிவித்துள்ள, ‘மாஸ்க் அணிதல், சானிடைசர் பயன்படுத்தல், தனி மனித இடைவெளியைக் கடைபிடித்தல், வசிப்பிடத்தை விட்டு வெளியே செல்லாமல் இருத்தல்’ போன்ற பாதுகாப்பு விதிமுறைகளை தவறாமல் பின்பற்றி; தம்பிகள் ஒவ்வொருவரும் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். இதுவே இந்தப் பிறந்தநாளுக்கு எனக்கு நீங்கள் தரும் பரிசாக இருக்கும்! நன்றி!!” என்று கூறியுள்ளார்.
ஒவ்வொருத்தரும் அவரவர் குடும்பத்தை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள். இதுவே நீங்கள் எனக்கு தரும் பிறந்த நாள் பரிசு.. அன்புடன் #கார்த்தி@Karthi_Offl#may25 தன்னுடைய பிறந்தநாளை முன்னிட்டு மன்றத்தின் அன்புத் தம்பிகளுக்கு கார்த்தி அவர்கள் அனுப்பியுள்ள கடிதம். pic.twitter.com/1AEz7gwjK5