சிவகார்த்திகேயனின் ‘டான்’… சேட்டிலைட் & டிஜிட்டல் ரைட்ஸை அதிக விலைக்கு கைப்பற்றிய பிரபல நிறுவனம்!
June 8, 2021 / 07:37 PM IST
|Follow Us
சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இப்போது, சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘டாக்டர்’, ‘அயலான்’ என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. சமீபத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் தனது கால்ஷீட் டைரியில் இணைய ஒரு புதிய படத்துக்கு ஓகே சொல்லியிருப்பதாக அறிவிப்பு வந்தது. இந்த படத்தை அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி தான் இயக்குகிறாராம்.
இவர் டாப் இயக்குநர்களில் ஒருவரான அட்லியிடம் உதவி இயக்குநராக பணியாற்றி சினிமா கற்றவராம். ‘டான்’ என டைட்டில் சூட்டப்பட்டுள்ள இந்த படத்தை ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனத்துடன் இணைந்து சிவகார்த்திகேயன் தனது ‘சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ்’ மூலம் தயாரிக்கிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார்.
மேலும், முக்கிய ரோல்களில் எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, சூரி, முனிஸ்காந்த், பால சரவணன், காளி வெங்கட், RJ விஜய், ஷிவாங்கி ஆகியோர் நடிக்கின்றனர். இன்னும் 10 நாட்களின் ஷூட்டிங் மட்டுமே பேலன்ஸ் உள்ளதாம். கொரோனா நோயின் இரண்டாவது அலை தாக்கம் இப்போது அதிகமானதால் அனைத்து படங்களின் ஷூட்டிங்கும் நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், ‘டான்’ படத்தின் சேட்டிலைட் மற்றும் டிஜிட்டல் ரைட்ஸை ரூ.34 கோடிக்கு ‘ஜீ5’ நிறுவனம் வாங்கி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.