‘தி ஃபேமிலி மேன் 2’வை தொடர்ந்து சமந்தா நடிக்கப்போகும் புதிய வெப் சீரிஸ்!
June 12, 2021 / 08:40 PM IST
|Follow Us
சினிமாவில் பாப்புலர் ஹீரோயினாக வலம் வருபவர் சமந்தா. இவர் நடிப்பில் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ என்ற தமிழ் படமும், ‘சகுந்தலம்’ என்ற தெலுங்கு படமும், ‘தி ஃபேமிலி மேன்’ (சீசன் 2) என்ற ஹிந்தி வெப் சீரிஸும் லைன் அப்பில் இருந்தது. இதில் ‘தி ஃபேமிலி மேன் 2’ வெப் சீரிஸ் கடந்த ஜூன் 4-ஆம் தேதி ‘அமேசான் ப்ரைம்’யில் ரிலீஸானது.
மனோஜ் பாஜ்பாய் ஹீரோவாக நடித்துள்ள இந்த சீரிஸில் சமந்தா பவர்ஃபுல்லான வில்லி ரோலில் மிரட்டியிருக்கிறார். மேலும், மிக முக்கிய ரோல்களில் ப்ரியாமணி, ஷாரிப் ஹாஸ்மி, சரத் ஹெல்கர், பவன் சோப்ரா, தேவதர்ஷினி, மைம் கோபி, அழகம் பெருமாள், விபின் ஷர்மா, உதய் மகேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர். இதனை இயக்குநர்கள் ராஜ் & டிகே இயக்கி உள்ளனர்.
தமிழர்களுக்கெதிரான இந்த வெப் சீரிஸின் ஒளிபரப்பை உடனடியாக நிறுத்த வேண்டுமென இயக்குநர்கள் சீமான், சேரன், ராம்குமார், பாரதிராஜா போன்ற பலர் ட்விட்டரில் தெரிவித்த வண்ணமுள்ளனர். இந்நிலையில், புதிய வெப் சீரிஸில் நடிக்க பிரபல OTT தளமான ‘நெட்ஃப்ளிக்ஸ்’ நிறுவனம் சமந்தாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் கிடைத்துள்ளது. தமிழ், ஹிந்தி, தெலுங்கு என மூன்று மொழிகளில் உருவாக உள்ள இந்த வெப் சீரிஸில் நடிப்பதற்காக சமந்தாவுக்கு அதிக சம்பளம் கொடுப்பதாக ‘நெட்ஃப்ளிக்ஸ்’ நிறுவனம் சொல்லியிருக்கிறதாம்.
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.