சர்வதேச யோகா தினம்… திரையுலக பிரபலங்கள் யோகா செய்யும் ஸ்டில்ஸ்!
June 21, 2021 / 09:57 PM IST
|Follow Us
‘கொரோனா’ நோயின் இரண்டாவது அலை தாக்கம் அதிகமானதால் திரையுலகில் அனைத்து படங்களின் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டது, திரையரங்குகளும் மூடப்பட்டது. நேற்று (ஜூன் 20-ஆம் தேதி) சில நிபந்தனைகளுடன் ஷூட்டிங் எடுக்க அரசாங்கம் அனுமதி கொடுத்து விட்டது.
அடுத்தடுத்து பல படங்களுக்கு கால்ஷீட் கொடுத்து செம பிஸியாக நடித்து வந்தார்கள் திரையுலக பிரபலங்கள். ஆனால், கடந்த சில நாட்களாக லாக் டவுன் டைமில் தான் பிரபலங்களுக்கு அதிக நேரம் கிடைத்திருந்தது. ஆகையால், அவரவர்கள் தங்களுக்கு பிடித்தமான விஷயத்தில் கவனம் செலுத்தி லாக் டவுனை பயனுள்ளதாக மாற்றினார்கள். சிலர், இதுவரை தெரியாத பல புதிய விஷயங்களையும் கற்றுக் கொண்டார்கள்.
இந்நிலையில், இன்று (ஜூன் 21-ஆம் தேதி) சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு திரையுலக பிரபலங்கள் பலர் யோகா செய்யும் ஸ்டில்ஸை ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளனர். திரையுலக பிரபலங்கள் யோகா செய்யும் இந்த ஸ்டில்ஸ் சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.
இந்த சூழலில், உடல் நலம் மன நலம் இரண்டையும் பாதுகாப்பது பேரவசியம்… அந்த பாதுகாப்பு தரும் அற்புத கலை யோகா. உலக யோகா தினம் நல்வாழ்த்துகள்.💐 pic.twitter.com/dGCsN6AWTn