ஏரியல் யோகா செய்த ‘பிக் பாஸ்’ ஷிவானி நாராயணன்… வைரலாகும் வீடியோ!
June 29, 2021 / 08:11 PM IST
|Follow Us
விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘சரவணன் மீனாட்சி’ சீரியலின் சீசன் 3 மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஷிவானி நாராயணன். அதன் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம்’ மற்றும் ‘ஜீ தமிழ்’ சேனலில் ஒளிபரப்பான ‘இரட்டை ரோஜா’ சீரியல்களிலும் சூப்பராக நடித்து அசத்தி ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார்.
மேலும், இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து கவர்ச்சியான ஸ்டில்ஸை ஷேரிட்டு வந்ததால் ஷிவானிக்கென மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. 19 வயதே ஆன ஷிவானி நாராயணனுக்கு சமீபத்தில் அடித்த ஜாக்பாட் தான் ‘பிக் பாஸ்’ என்ட்ரி. விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 4 கடந்த ஆண்டு (2020) அக்டோபர் 4-ஆம் தேதி முதல் துவங்கி இந்த ஆண்டு (2021) ஜனவரி 17-ஆம் தேதி வரை ஒளிபரப்பானது.
கடந்த ஜனவரி 10-ஆம் தேதி பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஷிவானி நாராயணன் எலிமினேட் செய்யப்பட்டார். தற்போது, ஷிவானி நாராயணன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய வீடியோ மற்றும் ஒரு ஸ்டில்லை வெளியிட்டுள்ளார். ஷிவானி நாராயணன் ஏரியல் (Aerial) யோகா செய்யும் இந்த ஸ்டில் மற்றும் வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.