விஜய் சேதுபதியின் ‘துக்ளக் தர்பார்’… ரிலீஸானது அசத்தலான புது ப்ரோமோ!
September 6, 2021 / 10:13 AM IST
|Follow Us
சினிமாவில் ஜெயிக்க கடின உழைப்பும், திறமையும் இருந்தால் போதும் யார் வேண்டுமானாலும் சாதித்து மாஸ் காட்டலாம் என்பதற்கு சிறந்த உதாரணம் தான் நடிகர் விஜய் சேதுபதி. இவரது ரசிகர்கள் ‘மக்கள் செல்வன்’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். இப்போது, ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிப்பில் பல படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.
இதில் ‘துக்ளக் தர்பார்’ என்ற படத்தின் ட்ரெய்லரை சமீபத்தில் விஜய் சேதுபதி ட்விட்டரில் ரிலீஸ் செய்தார். இந்த ட்ரெய்லர் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்தது. படத்தில் மிக முக்கிய ரோல்களில் ராஷி கண்ணா, மஞ்சிமா மோகன், பார்த்திபன், கருணாகரன், ‘பிக் பாஸ் 4’ மூலம் ஃபேமஸான சம்யுக்தா நடித்துள்ளனர்.
இந்த படத்தை அறிமுக இயக்குநர் டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்க, ‘7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ’ லலித் குமார் தயாரித்துள்ளார். கோவிந்த் வஸந்தா இசையமைத்துள்ள இதற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தை சன் டிவியில் வருகிற செப்டம்பர் 10-ஆம் தேதி மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பவும், அதற்கு அடுத்த நாள் (செப்டம்பர் 11-ஆம் தேதி) ‘நெட்ஃப்ளிக்ஸ்’-யில் ரிலீஸ் செய்யவும் ப்ளான் போட்டுள்ளனர். தற்போது, இப்படத்தின் புது ப்ரோமோவை ரிலீஸ் செய்துள்ளனர்.
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.