“விளம்பரத்திற்காக யாரையும் அவமதிக்க வேண்டிய எண்ணமோ, தேவையோ எனக்கு இல்லை”… அன்புமணிக்கு சூர்யா பதில் கடிதம்!
November 12, 2021 / 12:01 PM IST
|Follow Us
சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவர் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கும் ‘வாடிவாசல்’, த.செ.ஞானவேல் இயக்கும் ‘ஜெய் பீம்’, பாண்டிராஜ் இயக்கும் ‘எதற்கும் துணிந்தவன்’ என மூன்று படங்கள் லைன் அப்பில் இருந்தது. இதில் த.செ.ஞானவேல் இயக்கியுள்ள ‘ஜெய் பீம்’, சூர்யாவின் கேரியரில் 39-வது படமாம்.
இப்படம் கடந்த நவம்பர் 2-ஆம் தேதி தீபாவளி ஸ்பெஷலாக பிரபல OTT தளமான ‘அமேசான் ப்ரைம்’-யில் ரிலீஸானது. சூர்யா வக்கீலாக நடித்திருந்த இந்த படத்தில் மிக முக்கிய ரோல்களில் பிரகாஷ் ராஜ், ரஜிஷா விஜயன், லிஜோமோல் ஜோஸ், மணிகண்டன், ராவ் ரமேஷ், குரு சோமசுந்தரம், தமிழ், எம்.எஸ்.பாஸ்கர், ஜெயபிரகாஷ், இளவரசு, சுஜாதா சிவக்குமார், சிபி தாமஸ் மற்றும் பலர் நடித்திருந்தனர்.
இந்த படத்துக்கு பாப்புலர் இசையமைப்பாளர்களில் ஒருவரான ஷான் ரோல்டன் இசையமைத்திருந்தார், எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்திருந்தார். இப்படத்தை பார்த்த திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும், விமர்சகர்களும் பாராட்டிய வண்ணமுள்ளனர். இந்நிலையில், பா.ம.க இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் ட்விட்டரில் “படைப்புச் சுதந்திரம் எந்த சமுதாயத்தையும் இழிவுபடுத்த பயன்படுத்தப் படக்கூடாது. மக்களின் வினாக்களுக்கு விடையளிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டு சூர்யாவுக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். தற்போது, நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் அன்புமணி ராமதாஸுக்கு பதில் கடிதம் எழுதியுள்ளார்.
படைப்புச் சுதந்திரம் எந்த சமுதாயத்தையும் இழிவுபடுத்த பயன்படுத்தப் படக்கூடாது: மக்களின் வினாக்களுக்கு விடையளிக்க வேண்டும்!