“நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் எந்தக் கட்சியுடனும் கூட்டணி இல்லை”… ‘விஜய் மக்கள் இயக்கம்’ அறிக்கை!
February 9, 2022 / 11:05 AM IST
|Follow Us
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய். இவரது ரசிகர்கள் ‘தளபதி’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். விஜய்யின் கடைசி படமான ‘மாஸ்டர்’ கடந்த ஆண்டு (2021) பொங்கல் ஸ்பெஷலாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தியில் ரிலீஸானது.
விஜய்யின் அடுத்த படமான ‘பீஸ்ட்’-ஐ நெல்சன் இயக்க, ‘சன் பிக்சர்ஸ்’ தயாரித்து வருகிறது. இதில் விஜய்-க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். இதன் ஷூட்டிங் முடிவடையும் தருவாயில் உள்ளதாம். ‘பீஸ்ட்’-ஐ தொடர்ந்து விஜய்-யின் 66-வது படத்தை ‘ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் தில் ராஜு தயாரிக்க உள்ளார். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாக உள்ள இப்படத்தினை ‘தோழா’ படம் மூலம் ஃபேமஸான இயக்குநர் வம்சி இயக்க உள்ளார்.
இந்த படத்துக்கான ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. இதன் ஷூட்டிங் வருகிற மார்ச் மாதத்தில் இருந்து ஆரம்பமாகவுள்ளது. படம் வருகிற தீபாவளி அல்லது அடுத்த ஆண்டு (2023) பொங்கலுக்கு ரிலீஸாகுமாம். இந்நிலையில், ‘விஜய் மக்கள் இயக்கம்’ சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் “தமிழ்நாட்டில் நடைபெறும் 2022-ஆம் ஆண்டின் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ‘தளபதி’ அவர்களின் உத்தரவின்படி ‘தளபதி விஜய் மக்கள் இயக்கம்’ எந்தக் கட்சியுடனும் கூட்டணியோ, ஆதரவோ இல்லாமல் தனித்து போட்டியிடுகிறது.
எனவே தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர்களுக்காக அனைத்து மாவட்ட தலைவர்களும், அணி தலைவர்களும், ஒன்றிய, நகர, பகுதி தலைவர்களும், நிர்வாகிகளும், தொண்டர்களும், ரசிகர்களும் முழுமூச்சுடன் பிரச்சாரம் செய்து, ‘தளபதி’ மற்றும் தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் மூலமாக செய்த நற்பணிகளை, மக்களிடத்தில் கொண்டு சேர்த்து நம் இயக்கத்தின் வேட்பாளர்களை வெற்றிபெற செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறப்பட்டுள்ளது.