ரஜினியின் 170-வது படத்தை இயக்கப்போகிறாரா அருண்ராஜா காமராஜ்?… போனி கபூர் போட்ட ட்வீட்!
February 21, 2022 / 12:26 PM IST
|Follow Us
தமிழ் சினிமாவில் மட்டுமின்றி இந்திய திரையுலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு பல சாதனைகள் செய்து மக்கள் மனதிலும் எப்பவும் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ஒரே நடிகர் ரஜினிகாந்த் தான். இவர் போலீஸாக மாஸ் காட்டிய ‘தர்பார்’ படம் 2020-ஆம் ஆண்டு தொடக்கத்தில் வெளியானது.
இந்த படத்துக்கு பிறகு ரஜினி, சிவா இயக்கத்தில் ‘அண்ணாத்த’ என்ற படத்தில் நடித்திருந்தார். ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரித்திருந்த இப்படம் கடந்த ஆண்டு (2021) நவம்பர் 4-ஆம் தேதி தீபாவளி ஸ்பெஷலாக திரையரங்குகளில் ரிலீஸானது. ரஜினியின் 169-வது படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான நெல்சன் இயக்க உள்ளார்.
‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கவுள்ளாராம். இப்படத்திற்கான ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறதாம். இந்நிலையில், ரஜினியின் 170-வது படத்தை பிரபல இயக்குநர் அருண்ராஜா காமராஜ் இயக்கவுள்ளதாகவும், இதனை போனி கபூர் தயாரிக்கவுள்ளதாகவும் கோலிவுட்டில் தண்டோரா போடப்படுகிறது. தற்போது, இது தொடர்பாக போனி கபூர் தனது ட்விட்டர் பக்கத்தில் “இந்த தகவல் உண்மையல்ல. வதந்தியே” என்று கூறியுள்ளார்.
Rajni Garu has been a friend for years. We meet regularly and keep exchanging ideas. Whenever we finalise a film to work together on, I shall be the first person to announce it. You will not have to get such ‘leaked ideas’.