பல ரூபிக்ஸ் க்யூப்கள்… அஜித் – ஷாலினிக்காக அந்த விஷயத்தை செய்து அசத்திய 9-ஆம் வகுப்பு மாணவன்!

  • May 11, 2021 / 12:58 PM IST

முன்னணி நடிகர்களில் ஒருவரான ‘தல’ அஜித் நடித்து 2019-ஆம் ஆண்டு வெளியான ‘நேர்கொண்ட பார்வை’ சூப்பர் ஹிட்டானது. ஆகையால், ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் இயக்குநர் ஹெச்.வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூருடன் மீண்டும் அஜித் கூட்டணி அமைத்திருக்கிறார். அந்த படம் தான் ‘வலிமை’.

இதில் ‘தல’ அஜித் காக்கி சட்டை அணிந்து பவர்ஃபுல்லான போலீஸ் ரோலில் வலம் வந்து எதிரிகளை துவம்சம் செய்யப் போகிறாராம். ரஜினியின் ‘காலா’ படத்தில் ‘ஜரீனா’ கதாபாத்திரத்தில் வந்த ஹூமா குரேஷி தான் இந்த படத்தில் ஹீரோயினாம். அஜித்துக்கு எதிரியாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடிக்கிறாராம். இப்படத்திற்கு டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

இதன் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தில் உள்ளது. இந்நிலையில், கொச்சியை சேர்ந்த அத்வைத் என்ற 9-ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒரு ஸ்பெஷல் வீடியோ ஒன்றை ட்விட்டரில் ரிலீஸ் செய்துள்ளார். இந்த வீடியோவில் அத்வைத் பல ரூபிக்ஸ் க்யூப்களை வைத்து அஜித் மற்றும் அவரது மனைவியும், நடிகையுமான ஷாலினியின் முகங்களை வடிவமைத்து அசத்தியுள்ளார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus