லோகேஷ் கனகராஜின் துணை இயக்குநர் மீது பெண் பரபரப்பு புகார் !
February 14, 2023 / 08:30 PM IST
|Follow Us
மாநகரம் , கைதி , மாஸ்டர் விக்ரம் ஆகிய படங்களை இயக்கியவர் நடிகர் லோகேஷ் கனகராஜ். இவர் தற்போது நடிகர் விஜய்யை வைத்து லியோ என்கிற படத்தை இயக்கி வருகிறார் . இந்த படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடந்து வருகிறது .
இந்நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜிடம் இணை இயக்குநராக பணியாற்றி வருபவர் விஷ்ணு இடவன் . இவர் பொளக்கட்டும் பர பர , நாயகன் மீண்டும் வரார் போன்ற ஹிட் பாடல்களையும் எழுதி உள்ளார் . இந்நிலையில் விஷ்ணு மீது இளம் பெண் ஒரு புகார் அளிப்பது சர்ச்சையாகி உள்ளது .
அந்த பெண் அளித்த புகாரில் ” விஷ்ணு எடவனும் அந்த பெண்ணும் நெருங்கி பழகினார்கள் என்றும் அதன் பிறகு அந்த பெண் கருவுற்றதாகவும் கூறப்பட்டுள்ளது . இந்த விஷயம் இரண்டு நபர்களின் வீட்டுக்கும் தெரிந்து பின் சென்னையில் உள்ள நுலும்பூரில் தனியாக வீடு எடுத்து தங்க வைத்துள்ளனர் . அப்போது அந்த பெண்ணை விரைவில் திருமண செய்து கொள்வதாக கூறிய விஷ்ணு இடவன் தற்போது திருமண செய்ய மறுத்து வருவதாக கூறப்படுகிறது . இது குறித்து விசாரணையை காவல்துறை தொடங்கி உள்ளது . விசாரனைக்கு நேரில் விஷ்ணு இடவன் ஆஜராகி இருந்தார் . தற்போது இந்த புகார் வளசரவாக்கம் அனைத்து மகளிர் காவல்துறைக்கு மாற்றப்பட்டுள்ளது .
Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus