தமிழ் சினிமாவில் பிரபல நடிகராகவும் தயாரிப்பாளராகவும் இருக்கும் நபருக்கு ஆண் குழந்தை சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளார் . தற்போது அவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் திரை உலகின் பிரபல நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஆர்கே சுரேஷ் பல படங்களை தயாரித்த நிலையில் பாலா இயக்கிய ’தாரை தப்பட்டை’ என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அதன் பிறகு அவர் நாயகன், வில்லன், குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார். ஆர்கே சுரேஷ் முக்கிய வேடத்தில் நடித்த ‘விசித்திரன்’ என்ற படம் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் ஆர்.கே. சுரேஷ் மனைவிக்கு சில மாதங்களுக்கு முன் வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது . இதில் பல முன்னணி நட்சத்திரங்களும் அரசியல் பிரமுகர்களும் பங்கேற்று இருந்தனர் .
இந்த நிலையில் தற்போது ஆர்கே சுரேஷ், தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக தனது சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளார். குழந்தைக்கு சில நிமிடங்கள் சுவாச பிரச்சனை இருந்ததாகவும், ஆனால் தற்போது குழந்தையின் உடல்நிலை கடவுள் அருளால் நன்றாக உள்ளது என்றும் ஆர்கே சுரேஷ் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் தனது குழந்தையின் புகைப்படத்தையும் பதிவு செய்துள்ளார் .
We are blessed with the boy baby . Unfortunately he had a breathing difficulties now by the grace of god he is fine . Pls keep us in your prayers #omnamahshivaypic.twitter.com/15NKDTvcYF