இயக்குனராக சாதித்த மாதவன் !

  • May 21, 2022 / 05:05 PM IST

நடிகர் மாதவன் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ராக்கெட்டரி . நடிகர் மாதவன் கதாநாயகனாகவும் நடிகை சிம்ரன் கதாநாயகியாகவும் நடித்து இருக்கிறார்கள் . சாம்.சி.எஸ் இந்த படத்திற்கு இசையமைத்து இருக்கிறார். நடிகர் ஷாருக் கான் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழியில் சிறப்பு தோற்றத்தில் நடித்து இருக்கிறார் மேலும் நடிகர் சூர்யா தமிழ் மொழியில் சிறப்பு தோற்றத்தில் நடித்து இருக்கிறார் .

இந்த படம் இந்திய விண்வெளி ஆராய்ச்சியாளர் நம்பி அவர்களின் கதை . இந்த படத்தில் நம்பி அவர்களின் 27வது முதல் 75 வரை அவர் வாழ்வில் நடந்த சம்பவங்களை படமாக எடுக்க உள்ளனர் .இந்த படம் கொரோனா காரணத்தினால் தொடர்ந்து திரையரங்கில் வெளியானது தாமதமாகி வருகிறது .

இந்நிலையில் கேன்ஸ் திரைப்பட விழாவில் ராக்கெட்டரி படத்தை திரையீட்டுள்ளனர். இந்த படத்தை பார்த்த பலரும் பாராட்டி வருகின்றனர் . குறிப்பாக ஏ.ஆர்.ரகுமான் இந்த படத்தை பார்த்துவிட்டு நடிகர் மாதவனை பாராட்டி உள்ளார் . இந்திய சினிமாவிற்கு புதிய குரலாக இந்த படம் உள்ளது என்றும் தெரிவித்துள்ளார் .

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus