ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு பதிலாக நடித்த ஆதி… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

  • September 24, 2023 / 11:20 AM IST

தமிழ் திரையுலகில் ஒரே நேரத்தில் ஒரு நடிகராகவும், ஒரு இசையமைப்பாளராகவும் கலக்கி வருபவர் ஜி.வி.பிரகாஷ் குமார். 2006-ஆம் ஆண்டு ‘வெயில்’ என்ற படத்தின் மூலம் ஜி.வி.பிரகாஷ் குமாரின் இளம் வயதில், அவரின் இசைப் பயணம் ஆரம்பமானது. ஜி.வசந்த பாலன் இயக்கியிருந்த அந்த படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட்டானது. ‘வெயில்’ படத்தின் ஹிட்டிற்கு பிறகு ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு இசையமைக்க வாய்ப்புகள் குவிந்தது.

பின், இசையமைப்பாளராக டாப் கியரில் சென்று கொண்டிருந்த ஜி.வி.பிரகாஷ் குமார், 2015-ஆம் ஆண்டு ‘டார்லிங்’ என்ற படத்தில் கதையின் நாயகனாக அவதாரம் எடுத்தார். அதுக்கு கிடைத்த வரவேற்பால், அடுத்து ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ என்ற படத்தில் நடித்தார். அப்படம் சூப்பர் ஹிட்டாக, ஜி.வி.பிரகாஷின் கால்ஷீட் டைரியில் நடிக்கவும் ஆஃபர்கள் குவிந்தது.

தற்போது, ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்காமல் மிஸ் பண்ண ஒரு சூப்பர் ஹிட் படம் குறித்த தகவல் கிடைத்துள்ளது. 2017-யில் ரிலீஸான தமிழ் படம் ‘மரகத நாணயம்’. இந்த படத்தை பிரபல இயக்குநர் ARK.சரவன் இயக்கியிருந்தார்.

இதில் ஹீரோவாக ஆதி நடித்திருந்தார். ஆனால், இப்படத்தில் கதாநாயகனாக நடிக்க வைக்க வேண்டுமென ARK.சரவனின் முதல் சாய்ஸாக இருந்தது ஜி.வி.பிரகாஷ் குமார் தானாம். பின், கால்ஷீட் பிரச்சனை காரணமாக ஜி.வி.பிரகாஷால் இப்படத்தில் நடிக்க முடியாமல் போனதாம்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus